Categories: டிவி

சிவாங்கி இனி இந்த பிரபலமான ஷோவை ஹோஸ்ட் பண்ண போறாங்களா?. அவரே விளியிட்ட சூப்பரான அப்டேட். அப்போ இனி அந்த தொகுப்பாளினி என்ன செய்வார்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. அவர் பேசுகையில் குழந்தை போல் பேசினாலும், பாடுகையில் குயிலாக மாறிவிடுவார். அந்த அளவிற்கு அவரின் குரலில் மாற்றம் இருக்கும். அதே போல அவர் இருக்கும் இடமும் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

சூப்பர் சிங்கரை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பெங்கேற்று இரண்டு சீசனாக கலக்கினார். அதிலும் இரண்டாவது சீசனில் அஷ்வினோடு இனைந்து அவர் செய்த சேட்டைக்கு அளவே இல்லை. “அஷ்வினே” என்ற டைலாக் அந்த சீசனின் பிரபலமான டைலாகாகவும் இருந்தது.

அதே சமயம் அவர் புகழை அண்ணா என்று அழைப்பதும், புகழ் அவரை தங்கை என்று அழைப்பதும் உண்மையான அண்ணன் தங்கை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவிங்கி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் “ஆங்கர் சிவாங்கி” என்று எழுதி உள்ளது. அதே சமயம், இதே இடத்தில் 2 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் ஆங்கர் ஆக போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

அதோடு, பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் பங்குபெற போவதாக செய்திகள் வெளியாகின. சிவாங்கியின் இந்த போட்டோவை பார்த்தால், பிரியங்கா பிக் பாஸ் செல்வது உறுதி என்பதாகவே தெரிகிறது. என்னினும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago