டிவி

சார் ஒரு போன் வாங்கி கொடுக்க சொல்லுங்க சார்.. கெஞ்சிய கனவர்.. முடியவே முடியாது என மறுத்த மனைவி… என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க பா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி “நீயா நானா”. மிகவும் அத்தியவாசிய தலைப்புகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வந்தார்.

சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கனவன் மனைவி வருமானம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் கனவரை விட அதிகம் சம்பாரிக்கும் மனைவி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது அப்பாவியாக எழுந்து நின்ற கனவர், “சார், என் மனைவி எனக்கு போனே கொடுக்க மாட்டேங்குறார் சார்” என புகார் அளித்தார். இதனை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், “என்னது உங்களுக்கு செல்போனே இல்லையா? அதுவும் இந்த காலத்துலயா? என பதறியபடி கேள்விகளை கேட்டார்.

இதற்கு பதில் கூறிய அவரின் மனைவி, “சார் இவர் செக்யூரிட்டி வேலை செய்கிறார் சார், அங்கு போன் அனுமதி இல்லை சார், நான் ஆபிஸ்ல வேலை செய்கிறேன், நான் போன் வச்சிருக்கேன் சார்” என காரணம் கூறினார். இதனை கேட்ட கனவர், “சார் நான் வேலை பார்க்கும் இடத்துல போன் யூஸ் பன்ன அனுமதி இல்ல தான், ஆனா வீட்டுக்கு வந்த பின் போன் பார்த்து பொழுதை கழிப்பேன்ல, நீங்க சொல்லி எனக்கு ஒரு போன் வாங்கி தர சொல்லுங்க சார்” என அப்பாவியாக கேட்டார்.

இதனை கேட்டு பரிதாபபட்ட கோபிநாத், “என்னங்க இது அநியாயமா இருக்கு, ஒரு போன் கூட வச்சிருக்க கூடாதா? அவருக்கு ஒரு போன் வாங்கி தர கூடாதா? என கேட்டார். அதற்கு மனைவி, “சார் அவர் நைட் 11 மணிக்கு மேல போண்ல விளையாடுவாரு சார், என் போன்ல விளையாடிகிட்டே இருப்பாரு சார், தினமும் இரவு என் போன் யூஸ் பன்னுவாரு சார்” என்றார்.

இதனை கேட்ட கோபிநாத், “என்னங்க நீங்க எந்த காலத்துல இருக்கீங்க… ஒரு அவசர தகவல் உங்களுக்கு சொல்லனும்னா கூட அவருக்கு ஒரு போன் வேணாமா? தினமும் நைட் 11 மணிக்கு மேல நீங்க தூங்குனதுக்கு பிறகு தான் அவரு உங்க போன் யூஸ் பன்னனும்னா இது ஞாயமா?” என கேட்டார். இதனை கேட்ட மனைவி, “சார்… அவரு போன்ல ஆன்லைன் ரம்மி விளையாடுறாரு சார், என் பையனையும் சேர்ந்து கெடுக்குறார்” என கூற..

“என்னது ஆன்லைன் ரம்மியா…. இவருக்கு போன் வாங்கி கொடுக்காதது சரி தான்மா… இனிமேலும் வாங்கி கொடுக்காதீங்கம்மா என கூறினார். முதலில் அந்த அப்பாவி கனவர் பேசுவதை கேட்டு ஆதங்கபட்ட அனைவரும் பின் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தெரிந்து கொண்ட பின்னர் அவர் மனைவி செய்தது ஞாயம் தான் என புரிந்து கொண்டனர்..

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago