பொழுதுபோக்கு

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் இயக்குநர் சேரன், வயது 51. மதுரையை அடுத்து உள்ள மேலூரில் பிறந்து வளர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர். தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் சில சினிமா கலைஞர்களில் சேரனும் ஒருவர்.

Sri Priyanka & Cheran

“பாரதி கண்ணம்மா”, ” போர்க்களம்”, “வெற்றிக்கொடி கட்டு” ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் கடந்த 2002ஆம் இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான “சொல்ல மறந்த கதை” படத்தில் நாயகனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் இயக்குநர் சேரன் நாயகனாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழ் திரை உலகில் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக தன் புதிய படத்தில் நாயகி வாய்ப்பை கொடுத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான சேரன். இதனை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Sri Priyanka

இந்தாண்டு ஆரம்பத்தில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “ஆனந்தம் விளையாடும் வீடு” இந்த படத்தில் நடிகர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இளம் நடிகை ஸ்ரீ பிரியங்கா ’கயல்’ என்ற கதாபாத்திரத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் போது இயக்குநர் சேரனிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா. கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று வாக்கு கொடுத்த இயக்குநர் சேரன், இப்போது தான் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகி வாய்ப்பினை நடிகை ஸ்ரீ பிரியங்காவிற்கு வழங்கியுள்ளார்.

Sri Priyanka

இயக்குநர் இசக்கி கார்மேகம் இயக்கத்தில் உருவாகும் “தமிழ்குடிமகன்” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த படத்தில் நடிகர் சேரன் நாயகனாகவும், நடிகை ஸ்ரீ பிரியங்கா நாயகியாகவும் நடிக்க உள்ளனர். லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் SA சந்திரசேகர், லால், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடிக்ககின்றனர். அன்பார்ந்த வாசகர்களே, இந்த கட்டுரை பிடித்திருந்தால் லைக் பன்னுங்க, மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் பிரண்ட்ஸ். தளத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.

 

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அதுல்யா – கை கொடுக்குமா இவருடைய போட்டோஷூட்ஸ்.

தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "காதல் கண் கட்டுதே".  இந்த…

4 years ago