டிவி

மீரா சந்தோசத்திற்காக பொய் சொன்ன அப்பா! மீண்டும் கிடைத்த கேட்டரிங் கான்ட்ராக்ட் – கண்ணான கண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா சீரியல் “கண்ணான கண்ணே”.  இந்த தொலைக்காட்சி தொடரை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். கதையின் நாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்னன், வயது 28, சென்னையில் பிறந்து வளர்ந்தவர், நடித்து வருகிறார்.

மீராவின் தந்தையாக நடிகர் பிரித்திவிராஜ் ‘கவுதம் கிருஷ்ணன்’ என்ற கதாபாத்திரத்திலும், மீராவின் கனவராக நடிகர் ராகுல் ரவி ‘யுவராஜா’ என்ற கதாபாத்திரத்திலும், நடிகை வினோதினி ‘யமுனா’ என்ற கதாபாத்திரத்தில் கவுதம் கிருஷ்ணன் 2வது மனைவியாக நடித்துள்ளார். மீரா பிறக்கும் போதே அவளது அம்மா இறந்து போவதால் மீரா மீது அவள் அப்பா கவுதம் வெருப்புடன் ராசியற்றவள் என கூறி வாழ்ந்து வருகிறார். கோடீஸ்வரனாக இருந்த கவுதம் குடும்பம் சொத்துக்களை இழந்து தற்போது மனம் திருந்தி தன் மகள் மீராவுடன் வாழ்ந்து வருகிறார்.

சிறு வயது முதல் தன்னை ராசியற்றவள் என கூறி வந்த தந்தை தற்போது தான் தன்னுடன் நன்றாக பேசி பழகுகிறார் என்ற சந்தோசத்தில் இருக்கும் மீரா, இன்று தன் தந்தை ஒரு கேட்டரிங் கான்ட்ராக்டிற்காக ஒரு பெரிய நிறுவனத்திற்கு செல்கிறார். தன் தந்தை தன் முகத்தை பார்த்து சென்றால் அவருக்கு கான்ட்ராக்ட் கிடைக்காமல் போய் விடும் என மீரா மறைந்து நிற்க, தன் மகளை இனியும் புறக்கனிக்க கூடாது என நினைக்கும் கவுதம் கிருஷ்ணன் மீராவை அழைத்து அவளிடம் பேசிவிட்டு செல்கிறார்.

கவுதம் கிருஷ்னனின் கேட்டரிங் தொடர்பான ஃபைலை பார்த்து திருப்தி அடைந்த  நிறுவன மேனேஜர் அவருக்கே கான்ட்ராக்ட் கொடுப்பதாக உறுதியளிக்கிறார். கேட்டரிங் கான்ட்ராக்ட் கிட்டதட்ட கிடைத்த நிலையில், கடைசி சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தின் முதலாளி தன் நெருங்கிய உறவினருக்கு கான்ட்ராக்ட்டை கொடுக்க சொல்கிறார். கைக்கு எட்டிய கான்ட்ராக்ட் கிடைக்காமல் போய் விட்டதாக கவலையுடன் வரும் கவுதம் தன் மகள் மீரா சந்தோசத்திற்காக கான்ட்ராக்ட் கிடைத்ததாக பொய் சொல்கிறார்.

மீரா, மீரா கனவர் யுவராஜ், கவுதம் மனைவி யமுனா என அனைவரும் சந்தோசப்பட, மீரா அனைவருக்கும் குலோப் ஜாமுன் செய்கிறார். யமுனா தன் கனவர் கவுதமுக்கு குலோப் ஜாமுன் கொடுக்க, அதனை சாப்பிட மறுக்கும் கவுதம், கான்ட்ராக்ட் கிடைக்காத விசயத்தை கூறுகிறார். மீரா சந்தோஷத்திற்காக தான் பொய் சொன்னதையும் கூறுகிறார். கான்ட்ராக்ட் கிடைக்காவிட்டாலும் தன் கனவர் மீராவுக்காக பொய் சொன்னதை நினைத்து யமுனாவும் சந்தோசபடுகிறார்.

அடுத்த நாள் காலை அந்த நிறுவனத்தின் மேனேஜர், கவுதம் வீடு தேடி வந்து கான்ட்ராக்ட் கிடைக்காததை கூற, கவுதம் கவலைகொள்கிறார். ஆனால் பிறந்தது முதல் வெறுத்த மீராவுக்காக இன்று கவுதம் பொய் சொன்னதை நினைத்து மீரா உட்பட அனைவரும் சந்தோசப்பட, கவுதமின் கேட்டரிங் தொடர்பான ஃபைலை படித்த முதலாளி தன் உறவினருக்கு கொடுக்கவிருந்த கான்ட்ராக்ட்டை கவுதமுக்கே கொடுத்து விட்டதாக மேனேஜர் கூற, கவுதம் மட்டுமின்றி மீரா அவள் கனவர் உட்பட அனைவரும் சந்தோசப்படுகிறார்கள்.

கேட்டரிங் கான்ட்ராக்ட் கிடச்சாச்சு, மீரா ராசியற்றவள் என்ற பலி நீங்கியாச்சி, கவுதம் மற்றும் அவர் மகள் மீரா இருவரும் சேர்ந்து இழந்த சொத்துக்களை மீட்பார்களா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்களாம். கண்ணானே கண்ணே தொலைக்காட்சி தொடரில் கண்டிப்பாக வரும் நாட்களில் பல ட்விஸ்ட்டுகளை எதிர்பார்க்களாம்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago