மோகன்லால் சுமார் 1.5 லட்சம் ரூபாயில் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு. இன்பத்தில் மூழ்கிய பிரிதிவிராஜ். அப்படி அது என்ன பொருள் தெரியுமா?

ஐந்து முறை தேசிய விருது பெற்ற ஒரு மிகசிறந்த நடிகராக உள்ளார் மோகன்லால். இவர் பெரும்பாலான படங்களை மலையாளத்தில் நடித்திருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சில படங்களை நடித்துள்ளார். இருவர், உன்னைப்போல் ஒருவன், காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து நாம் ரசித்திருப்போம்.

அதே போல, மலையாள நடிகரான பிரித்விராஜும் மிக சிறந்த நடிகர், அதே சமயம் அவர் இயக்குநராகுவும், இருந்து வருகிறார். மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவரின் நடிப்பை நாம் ரசித்ததுண்டு.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட ” லூசிபர்” படத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மோகன்லால் நாயகனாக நடித்த அந்த படத்தை பிரிதிவிராஜ் தான் இயக்கி இருந்தார். அவர் இயக்கிய முதல் படம் அது தான். அந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி அளவிற்கு வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது லூசிபர் 2 படத்தையும் மோகன்லாலை வைத்தே இயக்க உள்ளார் பிரிதிவிராஜ். ஆனால் அதற்க்கு முன்பாக “ப்ரோ டாடி” என்ற படத்தை மோகன்லாலை வைத்தே இயக்கி வருகிறார் பிரிதிவிராஜ். இந்த படம் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், மோகன்லால் இவரின் திறமையை பாராட்டி இவருக்கு ஒரு அன்பு பரிசு வழங்கி உள்ளார்.

அந்த பரிசு என்னவென்றால் ஒரு அற்புதமான கூலர்ஸ் தான். அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரிதிவிராஜ். அந்த கூலர்சின் விலை கிட்டத்தட்ட 1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago