டிவி

தன் செல்ல மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர் வில்லி நடிகை..

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அழகிய வில்லியாக பல தொடர்களில் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி அஷோக், வயது 34, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை மற்றும் மாடல். தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி முன்னனி நாயகியாக வர வேண்டும் என்ற ஆசையில் கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “புதுக்கோட்டையிலிருந்து சரவணன்” படத்தில் தனுஷ் தங்கையாக ‘செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ஸ்ரீதேவி.

இதன் பின்னர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரீதேவி கடந்த 2007ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “செல்லமடி நீ எனக்கு” என்ற தொலைக்காட்சி தொடர் மூலமாக தொலைக்காட்சி உலகில் தன் கலை பயணத்தை தொடங்கினார். 2010ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “தங்கம்” தொலைக்காட்சி தொடரில் நடிகை ரம்யா கிருஷ்னன் தங்கையாக “ரமாதேவி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

2013ம் ஆண்டு ஒளிபரப்பான “வாணி ராணி” தொடரில் ‘ஷென்பகம்’ என்ற கதாபாத்திரத்திலும், 2014ம் ஆண்டு ஒளிபரப்பான “கல்யாண பரிசு” தொடரில் ‘சுப்புலக்ஷ்மி’ என்ற கதாபாத்திரத்திலும் வில்லியாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதேவி அஷோக். 2017ம் ஆண்டு ஒளிபர்பான “ராஜா ராணி” என்ற தொடரில் ‘அர்ச்சனா’ என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து தமிழ் சின்னத்திரை உலகில் பிரபலமானார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியரான அசோக் சின்டாலாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிகை ஸ்ரீதேவி தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்த வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “காற்றுக்கென்ன வேலி” மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தாலாட்டு” ஆகிய இரு தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவி அஷோக்.

கடந்த 2021ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி அஷோக்கிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சித்தாரா சின்டாலா என பெயர் சூட்டினார்கள். இன்று காலை நடிகை ஸ்ரீதேவி அஷோக் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு தன் குழந்தையுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago