என் முகத்தில் பருக்கள் வர இது தான் காரணம். உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதா பாத்திரத்தில் நடித்து வந்தவர் வி.ஜெ தீபிகா. அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்ற பட்டது. அதற்க்கு காரணமாக கூறப்பட்டது வி.ஜெ தீபிகாவின் முகத்தில் இருந்த பருக்கள் தான்.

இவர் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டார்சில் நடித்த போது, இவரின் முகப்பரு குறித்து ரசிகர்களே கூட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்தனர். ஆனால் போக போக இவர் அந்த கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொறுத்திவிட்டார்.

தற்போது இவர் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கே கூட மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தன் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் தீபிகா. ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு யுடியுப் சேனல்கள் அவரிடம் நேர்காணல் செய்து அவர் விளக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிந்தனர்.

சமீபத்தில் யுடியுப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தனுக்கு முகப்பரு வந்ததற்கான காரணம் என்ன? அதை சரி செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? இப்படி பலவற்றை அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். அதாவது கடந்த வருடம் முதலே அவருக்கு முகப்பரு அதிகமாக இருந்துள்ளதாம். அப்போதே அவர் மருத்துவரிடம் சென்று அதற்க்கு ஆலோசனை கேட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், இது சாதாரண பருவாக தெரியவில்லை, உடம்பிற்குள் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது, ஆகையால் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த ஸ்கேனை மாதவிடாய் காலத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதால் ஒரு மதத்திற்கு சில மருந்துகளை மட்டும் வாங்கிக்கொண்டு வந்துள்ளார் தீபிகா.

அவரிடம் பண வசதி பெரிதாக இல்லாததால், ஸ்கேன் எடுப்பதை தவிர்த்துவிட்டு தன் வேலையை பார்க்க துவங்கி உள்ளார் தீபிகா. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டார்சில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, மீண்டும் முகப்பருவிற்கு தீர்வு காண மருத்துவரை அவர் அணுகியுள்ளார். மீண்டும் மருத்துவர் ஸ்கேன் செய்யவேண்டும் என்று கூறவே, ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது அவருக்கு PCOD என்னும் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கர்ப்பப்பையில் நீர் கட்டி இருந்துள்ளது. இதனால் தான் முப்பரு அதிகம் வருகிறது என்று கூறிய மருத்துவர், அதை சரி செய்வதற்கான மருந்துகளையும், உணவு முறைகளையும் பரிந்துரைத்துள்ளார். தீபிகாவும் அதை முறையாக பின்பற்றி வர, தற்போது அவருடைய பிரச்சனை சற்று சரியாக துவங்கி உள்ளது.

இந்த நிலையில் தான் அவர் பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தன்னுடைய முகப்பரு பிரச்சனை முழுவதும் சரியாகிவிடும் என்றும், அதன் பிறகு மீண்டும் கண்டிப்பாக சீரியலில் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago