Categories: டிவி

கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் நடிகை. எலிக்குட்டிக்குள் ஒரு சின்ன குட்டி என்று கிண்டலடித்த சீரியல் நடிகர்.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் ஆர்.ஜெ செந்தில் நடிக்கும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு இருப்பது உண்மைதான். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் 250 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அந்த சீரியல் சம்பந்தப்பட்ட நடிகை ஒருவர் தற்போது கர்பமாக உள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

Naam iruvar namakku iruvar serial

நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. கொரோனா காலகட்டத்தில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது போல இந்த சீரியலும் நிறுத்தப்பட்டு தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இதன் முதல் பாகம் 579 எபிசோடுகள் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஆர்.ஜெ செந்தில், மாயம், மாறன் என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக மஹா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வருகிறார். சமீபத்தில் ரக்ஷிதா இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற வதந்திகள் கூட உலாவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் முதல் பாகத்தை பொறுத்தவரை மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு ஆனந்தி என்ற ஒரு தங்கை உண்டு. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் நடிகை வனிதா ஹரிஹரன். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பது குறித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீரியல் நடிகர் கிருஷ்ணா தனது கமெண்டில் எலிக்குட்டிக்குள் ஒரு சிறிய குழந்தை உள்ளதா என்று செல்லமாக கூறியுள்ளார்.

Actress Vanitha hariharan

வனிதா ஹரிஹரனை பொறுத்தவரை, லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த இவர், தெய்வமகள், பொன்னூஞ்சல், கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பகல் நிலவு இப்படி பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். நாம் இருவர் நமக்கிருவர் சீரியலை பொறுத்தவரை இவரது திருமணத்தை மையப்படுத்தி மட்டுமே பல எபிசோடுகள் சென்றது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago