Categories: டிவி

பாடையில் கெடத்தி இருந்தது லட்சுமி அம்மாவே கிடையாது. இனி லட்சிமி அம்மாவின் இடம் எனக்கு தான். மீனா வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ.

700 எபிசோடுகளை கடந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்ட்ரோஸ். அண்ணன் தம்பி செண்டிமெண்ட் மூலம் மக்களிடம் பேறாதரவை பெற்ற இந்த சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்பத்தில், இந்த சீரியல் ஆனந்தம் படத்தை அப்படியே எடுக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதை எல்லாம் தகர்த்தெறிந்து இன்று பல விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கிறது.

pandian stores

இந்த சீரியலில் கடந்த வரம் முழுவதும் லட்சுமி அம்மாள் இறந்திருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை கண்ட பலர் கண்கலங்கினார். என்ன இது இப்படி எல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்று சில விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் அங்கு அந்த காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என்பது குறித்து ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்தே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த சீரியலில் இரண்டாவது மருமகளாக நடிக்கும் மீனா.

மீனாவை பொறுத்தவரை ஆரம்பத்தில் இவர் குடும்பத்தை பிரித்துவிடுவார் என்று அனைவரும் என்னும்படியானா ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் போக போக இவர் ஒரு குறும்புக்கார அதே சமயம் நல்ல ஒரு மருமகளாவும் மாறிவிட்டார். இவரின் தந்தை காதாபாத்திரமும் தற்போது நல்ல கதாபாத்திரமாக மாறியுள்ளார்.

லட்சுமி அம்மாள் குறித்து மீனா கூறுகையில், இந்த செட்டில் லட்சுமி அம்மாவோடு அதிக நேரம் செலவிடுவது நான் தான். நாங்கள் இருவரும் ஒரு அறையில் தான் இருப்போம். எப்போதும் லட்சமி அம்மாள் மெத்தையில் படுத்துக்கொண்டு தான் இருப்பர். ஷாட் ரெடி என்றால் எழுந்து நடிக்க செல்வார். இவர் ஷூட்டிங்கிற்கு வந்தாலும் வராவிட்டாலும் இவருடைய மெத்தையை யாரும் தொட மாட்டோம். இப்போது இந்த மெத்தையை இவர் எனக்கு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் மீனா.

அதே சமயம் லட்சுமி அம்மாள் குறித்து அவர் கூறுகையில், நீங்கள் சீரியலில் பார்ப்பது போல இவர் கிடையாது. மிகவும் கலகலப்பான ஒரு ஆள் இவர். இவர் அற்புதமாக பாடுவார், நடனம் ஆடுவார். அதே போல நேரில் பார்ப்பதற்கு இவர் மிகவும் இளமையாக இருப்பார். இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை பார்த்து நானே அசந்துபோய்விட்டேன் என்று கூறியுள்ளார். அதே போல லட்சுமி அம்மாள் பாடையில் படுத்திருக்கு அந்த பாடையை தூக்கி செல்வது போன்ற காட்சிகளில் லட்சுமி அம்மாள் நடிக்கவில்லை என்றும், அந்த காட்சிகள் எல்லாம் ஒரு டம்மி பொம்மை கொண்டு படமாக்கப்பட்டது என்றும் மீனா அதில் குறிப்பிட்டு அந்த பொம்மையையும் காண்பித்துள்ளார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago