Categories: டிவி

தனது காயத்தின் எக்ஸ்ரே புகைப்படத்தை வெளியிட்ட மாகாபா. என்ன ஆச்சி என பதறிப்போன ரசிகர்கள்.

விஜய் டிவியில் தொடர்ந்து பல காலங்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்குபவர் தான் மாகாபா அவர்கள். சென்ற வாரங்களில் வந்த சூப்பர் சிங்கர் எபிசோட்களில் அவர் கையில் கட்டுடன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவ்வாறு அவர் கையில் கட்டுடன் இருப்பதை பார்த்த ரசிகர்களும், ஊடகங்களும் பலவித சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மாகாபா ஆனந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து உண்மையான காரணத்தைப் தெரிந்து கொள்ளலாமா?

Ma ka pa Anand

சிறந்த நடிகரும் தொகுப்பாளருமான மாகாபா ஆனந்த் அவர்கள் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்ற காரணத்திற்காக தான் தனது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றுவது தான். அதனையும் சிறப்புடன் செய்து வந்த அவருக்கு சில காலங்களுக்குப் பிறகு தான் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

சிவகார்த்திகேயன் அவர்கள் சிறப்புடன் நடத்தி வந்த அது இது எது என்ற நிகழ்ச்சியில் தான் மாகாபா அவர்களும் தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சினிமா காரம் காபி நிகழ்ச்சியையும் சிறிது காலங்கள் சிறப்புடன் தொகுத்து வழங்கி வந்தார். இப்பொழுது ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிகவும் அருமையாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் அவரது பேச்சு திறமையால் கலகலப்புடன் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்து வழங்கி வருகின்றார். இவ்வளவு நிகழ்ச்சிகளுக்கு இடையிலும் ஒரு சில படங்களிலும் சிறந்த கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி கொண்டும் வருகிறார்.

ஆனால் இப்பொழுது அவர் கையில் கட்டுடன் வலம் வருவதே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையுடன் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது கையின் எக்ஸ்ரே புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதனை வைத்து அவருக்கு கையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த எக்ஸ்ரே புகைப்படத்தை பார்க்கும் பொழுது எந்தவித பெரிய பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அவரது ரசிகர்கள் சற்று சமாதானம் அடைந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில செய்திகள் இவருக்கு தற்போது ஏதோ விபத்து நடந்திருப்பதாகவும் கூறிக்கொண்டு வருகின்றன. ஆனால் மாகாபா ஆனந்த் அவர்களுக்கு கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கான உண்மையான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக மாகாபா அவர்களும் எந்தவித பதிலும் மக்களிடத்தில் கூறவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து விஜய் டிவியில் தனது பணியினை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

எனவே அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை மிகவும் சிறியதாக தான் இருக்க வேண்டுமே தவிர பயப்படும் அளவிற்கு எந்தவித பெரிய பிரச்சினையும் இல்லை என்றும் அவரது ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு மாகாபா அவர்களின் நிலைமை குறித்து ஒவ்வொருவரும் பலவிதமான கருத்துக்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago