புகைப்பட செய்தி

என்ன! ஜெய்பீம் படத்தில் நடித்த இந்த நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டதா? இவரது கணவர் யார் என்று தெரியுமா? இதோ அந்த அழகிய ஜோடிகளின் புகைப்படம்

நடிகர் சூர்யா அவர்கள் தொடர்ந்து Ott தளத்தில் தான் தன்னுடைய படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இவ்வாறே வெளியாகியுள்ளது. நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் அவர்கள்தான் இந்த ஜெய்பீம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

jaibeem

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். எஸ். ஆர். கதிர் அவர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் பழங்குடியினரின் உரிமையைப் பற்றிப் பேசும் படமாக அமைந்துள்ளது. இவ்வாறு பழங்குடியினர் பற்றி இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் அனைத்துமே காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியினர் பற்றியதாகவே இருந்தது. ஆனால் முதன் முதலில் சமவெளியில் வாழக்கூடிய பழங்குடியினர் பற்றிய முதல் திரைப்படம் இந்த ஜெய் பீம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் போலீஸ் பழங்குடியின மக்கள் மீது ஆதாரம் இல்லாமல் பொய் வழக்குப் போடுவது என்பது வழக்கம்தான். அப்படி ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த கதை உண்மையில் பழங்குடியின சமூகத்தில் நடந்த உண்மை சம்பவமாகும். இந்தப் படத்தில் ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ்.

marriage

இதில் மணிகண்டனின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைபடத்தில் ஜிவி பிரகாஷ் அவர்களின் சகோதரியாகவும், நடிகர் சித்தார்த் அவர்களின் மனைவியாகவும் நடித்து மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்திருந்தார்.

இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவரா ஜெய் பீம் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக அவரின் தோற்றமும், நடிப்பும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் சில மாதங்களுக்கு முன்புதான் தனது திருமணத்தை ரகசியமாக செய்து முடித்துள்ளார்.

marriage

நடிகை லிஜோமோல் ஜோஸ் கேரளாவை சேர்ந்த ஆண்டனி என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

marriage

தற்போது இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரவலாகி கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து தேடித்தேடி இந்த நடிகை யார் என்று கண்டுபிடித்து இணையத்தை தெரிக்கவிட்ட ரசிகர்கள் மத்தியில் இப்போது வெளியாகியுள்ள இவரது திருமண புகைப்படம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago