புகைப்பட செய்தி

புதிய பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்களில் பட்டய கிளப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – ஒரு பார்வை

தமிழ் தொலைக்காட்சி உலகில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் KS தங்கசாமி இயக்கத்தில் நடிகர் சத்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “எட்டுதிக்கும் மதயானை”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீமுகி, வயது 29, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி.

திரை உலகில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி முன்னனி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அவ்வப்போது ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நடிகை ஸ்ரீமுகி, அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கு தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பாகி வரும் ” செப் மந்த்ரா” மற்றும் “சரிகமப தி சிங்கிங் சூப்பர் ஸ்டார்” ஆகிய 2 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரை உலகில் இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் புதிய படம் “போலோ சங்கர்”. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஸ்ரீமுகி. இந்த ஆண்டு நடிகை ஸ்ரீமுகி ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இது தான். இந்த படம் தமிழ் திரை உலகில் ஸ்டார் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வேதாளம்” படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

தெலுங்கு திரை உலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகவும் குஷியாக உள்ள நடிகை ஸ்ரீமுகி, இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்துள்ளார். ” போலோ சங்கர்” படத்தில் ஒப்பந்தமானவுடன் நடிகை ஸ்ரீமுகி ஒரு பிரத்யேக போட்டோஷூட்டில் பங்கேற்று அசத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட்டில் பஞ்சு மிட்டாய் நிற ஸ்லீவ்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் பஞ்சு மிட்டாய் நிற பேன்ட் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் நடிகை ஸ்ரீமுகி தன் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்துள்ளார். நடிகை ஸ்ரீமுகியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றபட்டு வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago