புகைப்பட செய்தி

புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அதுல்யா – கை கொடுக்குமா இவருடைய போட்டோஷூட்ஸ்.

தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காதல் கண் கட்டுதே”.  இந்த படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் இளம் நடிகை அதுல்யா ரவி, வயது 27, கோவையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான ” ஏமாளி”, “நாகேஷ் திரையரங்கம்” உள்ளிட்ட படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பார்ட்டுக்களையும் பெற்றார் நடிகை அதுல்யா.

தொடர்ந்து ஹோம்லியாக நடித்து வந்த நடிகை அதுல்யாவுக்கு குணசித்திர வேடங்களே பெரும்பாலும் கிடைத்தன, பட வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது, இதனால் கிளாமராக நடித்து இழந்த மார்கெட்டை மீட்க முடிவு செய்த நடிகை அதுல்யா கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஜெய் ஜோடியாக நடித்து வெளியான “கேப்மாரி” படத்தில் கிளாமராக நடித்ததுடன் நடிகர் ஜெய்யுடன் சில நெருக்கமான காதல் காட்சிகளிலும் நடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து “முருங்கக்காய் சிப்ஸ்”, ” நாடோடிகள் 2″ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை அதுல்யா இந்தாண்டு “வட்டம்”, ” எண்ணித்துணிக”, மற்றும் “காடவர்” ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். இதில் “எண்ணித்துணிக” படத்தில் மட்டுமே நாயகியாக நடித்துள்ளார், மீதமுள்ள 2 படங்களிலும் குணசித்திர வேடங்களிலே நடித்திருந்தார் நடிகை அதுல்யா.

தற்போது நடிகை அதுல்யா கைவசம் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வரும் “டீசல்” படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் நடிகை அதுல்யா மீண்டும் பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் நடிகை அதுல்யா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் புடவை கட்டிக்கொண்டு ஒரு அட்டகாசமான பிரத்யேக போட்டோஷூட்டில் பங்கேற்றிருந்தார். நடிகை அதுல்யா ரவிரின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருகின்றன. இந்த பிரத்யேக போட்டோஷூட்கள் நடிகை அதுல்யா ரவிக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago