Categories: மூவிகள்

ஏழு வருடம் கழித்து வெளிவர இருக்கும் அருண்விஜய் படம். எப்படி தான் எடுத்துள்ளார்கள் என பார்க்க விரும்பும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்கள் பல படங்களில் தனது சிறந்த நடிப்பு திறனை வெளிக் காண்பித்துள்ளார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது. இந்த சூழ்நிலையில் இறுதியாக வெளிவந்த இவருடைய படங்களில் அருண் விஜய் மாபியா கூட்டத்தின் தலைவர் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துருந்தார்.

Arun Vijay

ஆரம்பகாலத்தில் அருண் விஜய் அவர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பு தமிழ் மக்களின் மத்தியில் கிடைக்கவில்லை. அதோடு பெரும்பாலான முன்னணி இயக்குனர்களின் பட வாய்ப்புகளும் வரவில்லை. இந்த நிலையில் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கேரக்டரை எடுத்து நடிக்க முடிவு செய்தார் அருண் விஜய். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் அருண்விஜய்யை தேடி வந்தன. இதனால் மீண்டும் அவர் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

தற்போதும் அவர் கையில் யானை, பாக்ஸர், டாக் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் அருண் விஜயின் நடிப்பில் எப்போதோ உருவான படம் ஒன்றை தற்போது வெளியிட போவதாக கூறி உள்ளார்கள். 2014ஆம் ஆண்டு உருவான இப்படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இந்த படம் “வா டீல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ரெக்க, ஜீவா ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் சத்யசிவா தான் அருண் விஜய்யின் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார்.

Vaa deal movie poster

கார்த்திகா நாயர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். கார்த்திகா 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதையும் பாருங்கள்: ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்த சாமியார் அவர்களை ஞாபகமிருக்கிறதா? அவரது மனைவியும் ஒரு சிறந்த நடிகை தான். அவர் யார் என்று தெரியுமா?

2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த்திரையிலும் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அவர் நடித்த வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் வெளியாக இருக்கும் அருண் விஜயின் இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 வருடத்திற்கு பிறகு வெளியாகும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இந்த தீபாவளிக்கு விருந்தளித்தால் நல்லது தான். 7 வருடத்திற்கு முன்பு எப்படி இந்த படத்தை எடுத்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு போன்ற மிகப்பெரிய படங்கள் வெளிவர உள்ள நிலையில், இந்த படம் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago