ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்த சாமியார் அவர்களை ஞாபகமிருக்கிறதா? அவரது மனைவியும் தமிழ் சினிமாவில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் யார் என்று தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் போன்ற முன்னணி நடிகர்களை மட்டும் நாம் பாராட்டி கொண்டாடுகிறோமே தவிர, காமெடி நடிகர்களையும் குணச்சித்திர நடிகர்களை நாம் ஞாபகம் வைத்திருப்பதென்பது கூட கிடையாது. ஆனால் இது போன்ற நடிகர்களின் உழைப்பும் கதாபாத்திரங்களும் கூட அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இது போன்ற நடிகர்களின் நடிப்பு திறனை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதுபோலதான் சந்திரமுகி படத்தில் சாமியாராக நடித்திருந்தவர் கன்னட நடிகர் அபினாஷ் அவர்கள். இந்தப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டதாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் சிறப்புடன் தனது வேலையை செய்திருந்தார்.

Actor Avinash

சந்திரமுகி படத்தில் சாமியாராக வந்திருந்த அபினாஷ் அவர்கள் படத்தில் தோன்றும் பொழுது முதலில் நமது கண்களுக்கு வில்லனாக தான் தெரிந்தார். அவருக்கும் ரஜினிக்கும் இடையில் சில மோதல் காட்சிகளும் இருந்திருக்கின்றன. அவர்கள் இருவருமே பேசிக்கொள்வதை பார்க்கும்போது அபினாஷ் அவர்கள் ரஜினிக்கு எதிராகவே வேலை செய்கிறார் என்பது போல தெரியும். அபினாஷ் அவர்கள் எப்பொழுதும் ரஜினி அவர்களை இந்த படத்தில் குறை கூறிக் கொண்டுதான் இருப்பார்.

ஆனால் இறுதியில் ரஜினி அவர்களின் உயிரைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பையும் இவர் கைகளில் எடுத்து செய்திருப்பார். இருவரின் இந்த நெகிழ்ச்சியான காட்சி படத்தில் மிகவும் சிறப்புடன் வந்திருந்தது. இவ்வாறு தனது மிக அருமையான நடிப்பை வெளிக் காட்டியிருந்தார் அபினாஷ் அவர்கள். அபினாஷ் அவர்களைப் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு உண்மை என்னவென்றால் இவரது மனைவியும் ஒரு தமிழ் நடிகையாக இருந்தவர் தான். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பல முன்னணி தொடர்களிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதுபோல் ஒருசில தமிழ் படங்களிலும் சிறந்த கதாபாத்திரங்களில் தனது அருமையான நடிப்பை வெளிக் காண்பித்திருக்கிறார். உதாரணமாக மாதவன் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட “ஜேஜே” திரைப்படம் மற்றும் கார்த்திக்கின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் போன்ற படங்களிலும் இவரது நடிப்பு மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பல படங்களில் அக்கா, அம்மா, அண்ணி என பல கதாபாத்திரங்களில் சிறப்புடன் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் மாளவிகா அவினாஷ் அவர்கள் பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்குகின்றார். இவர் தமிழ்நாட்டில் பிராமண குடும்பத்தில் தான் பிறந்தார். அதன் பிறகே கன்னட நடிகரான அபினாஷை திருமணம் செய்து கொண்டார்.

Avinash and Malavika

இவர் தற்போது அரசியலிலும் சிறந்து விளங்குகின்றார். பிரபல முன்னணி கட்சியில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார். நடிப்பு, நடனம், திறமையான பேச்சு, அரசியல் இவ்வாறு பல திறமைகளை தன்னுள் கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா அவினாஷ் அவர்கள். இவை அனைத்தையும் தாண்டி மாளவிகா அவர்களும் அபினாஷ் அவர்களும் சிறந்த தம்பதியினராக தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அழகான மகள் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் தற்போது கர்நாடகாவில் தான் தங்களது இனிமையான வாழ்வை நடத்தி வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago