மூவிகள்

இளைய தளபதி விஜய் படத்தின் ரீமேக் தான் வெந்து தணிந்தது காடு – ட்ரோல் செய்யும் குறும்புக்கார வலைதள வாசிகள். – vijay

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக டாக்டர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்து வருகிறது.

vijay in nenjinile

மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிசில் புதிய உச்சம் தொட்டதை சமூக வலைதள பக்கத்தில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சில குறும்புக்கார சமூக வலைதளவாசிகள் “வெந்து தணிந்தது காடு” படம் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான “நெஞ்சினிலே” படத்தின் ரீமேக் என்று ட்ரோல் செய்து வருவது சற்று வேடிக்கையாக தான் உள்ளது.

என்னதான் இது வேடிக்கையாக இருந்தாலும் 1999ம் ஆண்டு வெளியான “நெஞ்சினிலே” படத்திற்கும் நேற்று வெளியான “வெந்து தனிந்தது காடு” படத்திற்கும் சில ஒற்றுமைகளும், குறிப்பாக திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருக்க தான் செய்கிறது. இரண்டு படங்களிலும் நாயகன் பிழைக்க முந்பை செல்கிறான். இரண்டு படங்களிலும் நாயகன் வேண்டா வெறுப்பாக நண்பனுக்காக அடிதடியில் இறங்கி டான் ஆகிறார்கள்.

simbu

“வெந்து தணிந்தது காதல்” படத்தின் நாயகி சித்தி இத்னானிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி வந்து கர்ஜி ரூமில் இருப்பதும், நாயகியை நாயகன் சிம்பு காப்பாற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதே போல “நெஞ்சினிலே” படத்தின் நாயகி இஷா கோபிகரை வில்லன் கடத்தி வந்து கட்டி போட, ஒருவன் நாயகியை கெடுக்க முயல, நாயகன் விஜய் நாயகியை காப்பாற்றும் காட்சி படமாக்கபட்டுள்ளது.

கதாநாயகியின் இந்த கடத்தல் காட்சி தான் “வெந்து தணிந்தது காடு” மற்றும் “நெஞ்சினிலே” படத்தில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டுமின்றி “வெந்து தணிந்தது காடு” படத்தில் வில்லன் இசக்கி உடன் இருக்கும் ரவுடிகள் கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளில் சிம்பு பக்கம் வந்து நிற்பது போல “நெஞ்சினிலே” படத்திலும் வில்லன் உடன் வந்த ரவுடிகள் விஜய்க்கு ஆதரவாக வில்லனை சுட்டு கொலை செய்வார்கள்.

simbu

“வெந்து தனிந்தது காடு” படத்திற்கும் 23 ஆண்டுகளுக்கு முன் வெளியான “நெஞ்சினிலே” படத்திற்க்கும் இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால் “வெந்து தனிந்தது காடு” படம் விஜய் படத்தின் ரீமேக் என்று குறும்புக்கார சமூக வலைதள வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago