மூவிகள்

சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் புதிய உச்சத்தை தொட்டது வெந்து தணிந்தது காடு! – முதல் நாள் வசூல் நிலவரம் இதோ..

கிட்டதட்ட 6 ஆண்டுகள் கழித்து கவுதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டனியில் வெளியாகி உள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி மிகவும் ஹோம்லியான கேரக்டரில் நடித்துள்ளார். சிம்பு அம்மாவாக நடிகை ராதிகா, கூட இருந்தே எதிரிக்கு தகவல் சொல்லும் உளவாளியாக நடிகர் அப்புகுட்டி என எதார்த்தமான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக டாக்டர் ஐசரி கனேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 200க்கும் அதிகமான அதிகாலை காட்சிகள் திரையிடபட்ட சிம்புவின் படம் ” வெந்து தனிந்தது காடு” படம் மட்டும் தான். இந்த படத்தை பற்றிய ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வந்தாலும் பொதுவான விமர்சனமாக படம் நல்லா இருக்கு, மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுக்கபட்டுள்ள படம் என்றே படம் பார்த்த பலரும் கூறி வருவது குறிப்பிடதக்கது.

படம் மிகவும் நீலமாக உள்ளது, சிம்பு சித்தி இத்னானி காதல் காட்சிகளில் கொஞ்சம் கூட எதார்த்தமே இல்லை எனற சில நெகட்டிவான விமர்சனங்கள் வந்தாலும், முற்றிலும் மாறுபட்ட கோனத்தில் கேங்ஸ்டர் படமாக அமைந்திருப்பதில் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சண்டை போட மாட்டேன், கொலை செய்ய மாட்டேன் என கூறும் சிம்பு தன் நண்பர்கள் தியேட்டரில் அடி வாங்கும் போதும் பாய்ந்து சென்று சண்டை போடுவதும், நண்பர்களை காக்க துப்பாக்கியால் சுட்டு கொல்லும் காட்சியிலும் விசில் பறக்கிறது. இந்த நிலையில் இந்த படம் சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் புதிய உச்சம் தொட்ட படமாக  அமைந்துள்ளது.

“வெந்து தனிந்தது காடு” படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியிடபட்டுள்ளது. இநதப்படம் முதல் நாள் மட்டும் 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாம். இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 7.4 கோடி வசூலித்துள்ளதாம் இந்த படம். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 94 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.

இதுவரை பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் சாதனை செய்த சிம்பு  படமாக இருந்தது “மாநாடு” படம் தானாம். “மாநாடு” படத்தின் முதல் நாள் வசூல் 8.4 கோடியாம். இந்த வசூல் சாதனையை தற்போது “வெந்து தனிந்தது காடு” படம் முறியடித்துள்ளது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வசூல் சாதனையை தற்போது சிம்பு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago