மூவிகள்

தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகும் புதிய பான் இந்தியா படம்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் முன்னனி இளம் நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா உலகின் அடுத்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார் யார் என்ற ரேசில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது நடித்து வரும் “நானே வருவேன்”, ” வாத்தி” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் “நானே வருவேன்” படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Director Arun Madeshwaran & Danush

“நானே வருவேன்” படத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில், குறிப்பாக தீபாவளிக்கு “வாத்தி” படம் வெளியாகும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. “நானே வருவேன்”, “வாத்தி” ஆகிய படங்களுக்கு பின் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் “கேப்டன் மில்லர்”.

” சாணிக்காகிதம்”, “ராக்கி” ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக “டாக்டர்”, ” டான்” உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Danush & Priyanka Mohan

தற்போது நடிகை பிரியங்கா இயக்குநர் M ராஜேஷ் இயக்கும் JR 30 படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது. தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. கூடுதல் தகவலாக “கேப்டன் மில்லர்” படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சந்தீப் கிஷான் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாநகரம்” படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Sandeep Kishan & Danush

நடிகர் தனுஷின் படம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெலியாவதில் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago