புகைப்பட செய்தி

90’ஸ் கனவு கன்னி நடிகை சங்கவியின் மகளை பார்த்துள்ளீர்களா. அச்சு அசல் சங்கவி போலவே உள்ளார்

90’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் நடிகை சங்கவி பரிச்சயமானவர். இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் 90’ஸ் கிட்ஸ் இடையே பேசப்படும் படங்களாக உள்ளது. இவருடைய இயற்பெயர் காவியா ரமேஷ். கர்னாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் மொழி மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் இப்படி தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சங்கவி தன்னுடைய பள்ளிப்படிப்பை மைசூரிலுள்ள மரியப்பா பள்ளியில் முடித்தார். நடிப்பின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சங்கவி 1993 ஆம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று விஜயுடன் இணைந்து ரசிகன், மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, போன்ற நான்கு படங்களில் நடித்து கவர்ச்சி கலந்த நடிகையாகவும் வலம் வந்தார்.

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் சேர்ந்து மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறா.அதுமட்டுமல்லாது இவர் அந்த காலத்தில் சிறந்து விளங்கிய சரத்குமார், கார்த்திக், பிரபு, விஜய், அஜித், ராம்கி, பிரசாந்த், விஜயகாந்த், சிரஞ்சீவி, விஷ்ணுவரதன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் நினைவு மாறா நடிகையாக திகழ்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் வெங்கடேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்து வருகிறது. சங்கவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகளின் புகைப்படத்தை வெளியிடவே அது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அச்சு அசலாக அடுத்த சங்கவி போலவே இருக்கிறது என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

Pratheep

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago