டிவி

தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் அறிமுகமாகி பட்டய கிளப்பும் அழகிய தமிழ் ஆண்ட்டி- ஸ்ரித்திகா ஸ்பெஷல்.

சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காத பல நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இன்றைய உலகில் திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை நிகழ்ச்சிகளும் சீரியல்களும் ஓலிபரப்பாகி வருவது தான். திரைப்படங்களில் இருக்கும் நகைச்சுவை, பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்து அம்சங்களும் தொலைக்காட்சி தொடர்களிலும் இடம்பெற்று வருகின்றன.

நடிகை ஸ்ரித்திகா, வயது 35, மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகமாகும் ஆசையுடன் தமிழகம் வந்தார். முஹூர்த்தம் என்ற சின்னத்திரை தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரித்திகா, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான “மஹேஷ், சரன்யா மற்றும் பலர்” என்ற படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் “வெண்ணிலா கபடி குழு” படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரித்திகா, கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான் “மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி” படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரித்திகா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான “நாதஸ்வரம்” என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து “குல தெய்வம்”, “கல்யாண பரிசு 2”, “அழகு” உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரித்திகா தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பாகி வரும் “மகராசி” என்ற தொடரில் “பாரதி” என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா.

தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னனி நாயகியாக கலக்கி வந்த நடிகை ஸ்ரித்திகா தற்போது முதன் முறையாக தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் அறிமுகமாகி உள்ளார். ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஆ ஒகட்டி அடக்கு” என்ற தொலைக்காட்சி தொடரில் “கோமலா” என்ற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா.

கடந்த 2019ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரித்திகா தமிழ் தொலைக்காட்சி உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் முன்னனி நாயகியாக பிசியான நடிகையாக வலம் வருகிறார். பார்க்க கொளு கொளுவென மிக அழகிய ஆண்ட்டி போல இருக்கும் நடிகை ஸ்ரித்திகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடதக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago