பொழுதுபோக்கு

ஹிந்தியில் ரீமேக்கான ராட்சசன், அப்செட் ஆன பிரபல நடிகை- காரணம் இது தானோ…

தமிழ் திரை உலகில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படம் “ராட்சசன்”. இந்த படத்தில் நடிகர் விஷ்னு விஷால் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். தமிழ் திரை உலகில் மெகா ஹிட் படமான இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.

ராட்சசன் படம் தெலுங்கு திரை உலகில் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் “ரக்ஷசுடு” என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்த படத்தில் பிரபல நடிகர் பெல்லம்கொன்டா சாய் ஸ்ரீனிவாஸ் நாயகனாகவும் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படமும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் ராட்சசன் படம் ஹிந்தி திரை உலகில் “கட்புட்லி” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை பிரபல பாலிவுட் பட இயக்குநர் ரஞ்சித் எம் திவாரி இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நாயகனாகவும், நடிகை ரகுல் பிரீத் சிங் நாயகியாகவும் நடித்திருந்தனர்.

கடந்த 2ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக இந்த படம் ரிலீஸ் ஆனது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெற தவறியதுடன் பிலாப் ஆனது. திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் படத்தின் நாயகி ரகுல் பிரீத் சிங் அப்செட் ஆகியுள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே படத்தில் இடம்பெற்றிருந்த ரொமான்ஸ் காட்சிகள் தான் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். சைக்கோ-த்ரில்லர் திரைப்படத்தில் இப்படி காதல் காட்சிகள் இருந்தால் நல்லாவா இருக்கும் என பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இதற்கு நடிகை ரகுல் பிரீத் சிங் “சிலருக்கு நடனம் புடிக்கும், சிலருக்கு த்ரில்லர் காட்சிகள் புடிக்கும், சிலருக்கு பாடல் புடிக்கும், இந்த படம் அனைத்தும் கலந்த மசாலா படம் என பதிலும் கூறியுள்ளார்.

என்ன தான் பதில் கூறினாலும் படம் தோல்வி அடைந்ததால் நடிகை ரகுல் பிரீத் சிங் அப்செட் ஆகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இவர் நடிப்பில் விரைவில் தமிழ் திரை உலகில் “அயலான்” என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago