மூவிகள்

சிம்புவின் புதிய படத்திற்கு சென்சார் சான்று பற்றிய தகவல்கள் வெளியாகியது- ரசிகர்கள் மகிழ்ச்சி.

தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் “வெந்து தனிந்தது காடு”. கேங்க்ஸ்டர், ஆக்ஷன் என்று பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் கதாசிரியர் பி ஜெயமோஹன் ஆவார். இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை சிதி இதானி, (வயது 26, மும்பையில் பிறந்து வளர்ந்தவர்) நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃப்லிம் இன்டர்நேஷனல் பேன்னரில் பிரபல பட தயாரிப்பாளர் டாக்டர் இஷாரி ஆர் கனேஷ் தயாரித்துள்ளார்.

“விண்ணை தாண்டி வருவாயா”, “அச்சம் என்பது மடமைய டா” ஆகிய இரு சிம்பு படங்களுக்கு பின் இந்த படத்தில் மூன்றாவது முறையாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளதால் இந்த படம் கண்டிப்பாக சிம்புவுக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்சார் தர சாண்றுக்காக சென்சார் போர்டுக்கு இந்த படம் அனுப்ப பட்டிருந்தது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A  தரச்சான்று வழங்கியுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை  படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃப்லிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 12) கூறியுள்ளது.

வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் சிம்பு இனைந்துள்ள இந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago