தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் “வெந்து தனிந்தது காடு”. கேங்க்ஸ்டர், ஆக்ஷன் என்று பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் கதாசிரியர் பி ஜெயமோஹன் ஆவார். இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை சிதி இதானி, (வயது 26, மும்பையில் பிறந்து வளர்ந்தவர்) நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃப்லிம் இன்டர்நேஷனல் பேன்னரில் பிரபல பட தயாரிப்பாளர் டாக்டர் இஷாரி ஆர் கனேஷ் தயாரித்துள்ளார்.
“விண்ணை தாண்டி வருவாயா”, “அச்சம் என்பது மடமைய டா” ஆகிய இரு சிம்பு படங்களுக்கு பின் இந்த படத்தில் மூன்றாவது முறையாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளதால் இந்த படம் கண்டிப்பாக சிம்புவுக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்சார் தர சாண்றுக்காக சென்சார் போர்டுக்கு இந்த படம் அனுப்ப பட்டிருந்தது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A தரச்சான்று வழங்கியுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃப்லிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 12) கூறியுள்ளது.
வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் சிம்பு இனைந்துள்ள இந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.