மூவிகள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன், அதற்காக வருத்தபடவில்லை- பிரபல நடிகை பகீர் பேட்டி.

தமிழ் திரை உலகில் பிரம்மாணடமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்தினம் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த படமானது பிரபல நாவலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி எடுக்கப்படும் படமாகும். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி உள்ள இந்த படம் பற்றிய பல செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் “தன்னை வந்தியத்தேவனாக நடிக்கை வைக்க வேண்டும் என முன்னால் முதலமைச்சர் செல்வி J ஜெயலலிதா” சொன்னதாக சொன்னார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தான் நிராகரித்து விட்டேன், அதற்காக நான் இப்போது வருத்தப்படவில்லை என பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார். இது பற்றி அவரே நேற்று ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி பற்றி இங்கு நாம் காணலாம்.

“நான் மணி சாரின் பெரிய ரசிகை, அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்றிருக்கிறேன், ஆனால் அப்போது நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே பிராஜக்ட்டுக்கு என்னை அனுகினார், ஆனால் அதில் நடிக்கும் மன நிலையில் நான் அப்போது இல்லை. அதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகீறேனா என கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன்” என அமலா பால் கூறியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் படம் பொன்னியின் செல்வன், சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நான் மறுத்து விட்டேன், அதற்காக நான் கவலை படவும் இல்லை என கூறி நடிகை அமலா பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago