Categories: டிவி

விஜய் டீவியின் முக்கியமான சீரியல் ஒன்று சில மாதங்கள் நிறுத்தப்பட உள்ளதா? எந்த சீரியல் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சி தடுமாற்றத்தில் இருந்த காலத்தில் அதை நிமிர்த்தி நிக்கவைத்த நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் மிக முக்கியமானது என்றே கூறலாம். இப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த 3 மாதங்களில் விஜய் டீவியின் சீரியல் நேரங்கள் மாற்றப்படுவதுண்டு. அதே நேரம் சில சீரியல்கள் சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதும் உண்டு. இந்த பிக் பாஸ் சீசனும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சீசன் 1 முதல் தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 5 வரை கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் பல்வேறு போட்டியாளர்களுக்கு தனித் தனியாக ரசிகர்கள் உருவாவதுண்டு.

பிக் பாஸ் வீட்டிற்குள்ளே போட்டியாளர்களுக்குள் எப்படி போட்டி நிலவுகிறதோ, அதை விட அதிகமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே போட்டி நிலவுவதை நாம் இதற்க்கு முன்பாக பார்த்து இருக்கிறோம். இந்த சீசனை பொறுத்தவரை இமான் அண்ணாச்சி, ப்ரியங்கா உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக 1 மணி நேரம் தேவை படுவதால், இரண்டு சீரியல்கள் தங்களது நேரத்தை விட்டுத்தர வேண்டி உள்ளது. அந்த வகையில் நடிகர் ரஞ்சித் நடித்துக்கொண்டிருக்கும் செந்தூர பூவே சீரியல் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து விஜய் தொலைக்காட்சி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

அதே சமையல் தொகுப்பாளினி ஜாக்லின் நடித்திக்கொண்டிருக்கும் தேன்மொழி பி.ஏ சீரியல் முடித்துவையாக்கப்பட உள்ளது. இது குறித்து ஜாக்லினே சமீபத்தில் ஒரு பெட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago