சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வயதாகும் சமயத்தில் அவர்களின் வாரிசுகள் படத்திற்கு வருவதுண்டு. நடிகர்களை எடுத்துக்கொண்டால் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி, அதர்வா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நடிகைகளை எடுத்துக்கொண்டால் கீர்த்தி சுரேஷ், சுருதி ஹாசன், கார்த்திகா, துளசி இப்படி வரிசை நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைய உள்ளனர்.
1980களில் வெளிவந்த பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் தான் நடிகை ஜீவிதா. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு”, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “நானே ராஜா நானே மந்திரி” போன்ற பல்வேறு படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம்.
இவர் நடிகையாக மட்டும் அல்லாமல், இயக்குனராகவும், தயாரிப்பாளராகுவும் இருந்துள்ளார். விக்ரம் நடிப்பில் வந்த சேது படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கியது இவர் தான். இவருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இளைய மகளான ஷிவாத்மிகா தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துவருகிறார். அதே சமயம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ள பெயரிடப்படாத ஒரு பாடத்திலும் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசோக் செல்வன் படத்தை பொறுத்தவரை, முன்னணி நடிகைகளான ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி ஆகியோரும் நடிக்க உள்ளனராம். இந்த படத்தை ஆர் கார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தில் 3 நாயகிகள் உள்ளதால் இது நிச்சயம் காதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…