போதும் போதும் ரொம்ப ஓவரா இருக்கு! என்று கூறும் அளவிற்கு பயங்கரமாக போட்டோ வெளியிட்ட ஃபீஸ்ட் பட கதாநாயகி

2020 ஆம் ஆண்டு வெளியான வைகுண்டபுரம் பட வெற்றிக்கு பிறகு பூஜா ஹெக்டே புகழின் உச்சியில் இருந்து வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பூஜா தனது க்யூட்டான நடிப்பை இப்படத்தில் வெளிகாட்டியிருக்கிறார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுக்கடுக்காக பல கதாநாயகர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும் உலக அளவிலும் மிக பிரமாண்டமாக வளர்ந்து வருகிறார் பூஜா ஹெக்டே.

pooja

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பூஜா ஹெக்டே நடிக்கும் படம்தான் இளையதளபதியின் பீஸ்ட் திரைப்படம். இந்த படம் தளபதி ரசிகர்களால் மிகவும் வரவேற்கபடுகிறது. இந்த படத்தில் நடிக்க பல கதாநாயகிகள் விஜயுடன் கிசுகிசுக்கப்பட்டார்கள். இருப்பினும் கடைசியாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியது பூஜா ஹெக்டே தான்.

இதன்மூலம் பூஜாவின் மார்க்கெட் இன்னும் சற்று மேலே உயர்ந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பிற்காக அவ்வப்பொழுது பூஜா ஹெக்டே சென்னை வந்து போவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு போனமுறை வந்தபோது ஏர்போர்ட்டில் பூஜா ஹெக்டே கொடுத்த படுகவர்ச்சியான போஸிற்க்கு நெட்டிசன்கள் சினிமாவில் கவர்ச்சியாக தோன்றலாம் ஆனால் நிஜத்திலும் இவ்வளவு கவர்ச்சியா என்று கலாய்த்து தள்ளினர்.

பின்னர் பூஜாவுக்கு கொரனா என்ற வதந்தியும் கிளம்பியது. அதன் பின்னர் பீஸ்ட் படப்பிடிப்புக்கு வராமல் சற்றே தள்ளி இருந்தார். மீண்டும் பீஸ்ட் படத்திற்காக வந்த பூஜா ஹெக்டே மெழுகு சிலை போல காட்சியளிப்பதாக சினிமா வட்டாரங்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். அவர் முன்பை விட மிக அழகாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளுகின்றனர். இருந்தபோதிலும் அவர் கிளாமராக உடை அணிவதை நிறுத்தவில்லை. படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் அவர் தனது உடையை மிக கிளாமராக தான் அணிகிறார். இதனாலேயே அதிக அளவில் நெட்டிசன்களால் கலாய்க்க படுகிறார்.

இளைய தளபதி விஜயுடன் இவர் சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பதால் இவர்களது கெமிஸ்ட்ரி எந்த அளவிற்கு இருக்கும் என்பது படம் ரிலீசான பிறகு தான் நம்மால் யூகிக்க முடியும். படம் ஹிட்டானால் பூஜாஹெக்டே மீண்டும் தமிழில் வலம் வருவார் என்பதே அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழில் பூஜாவின் முதல் படம் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்திருந்த முகமூடி.. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படம் வியாபார ரீதியாக லாபம் ஈட்ட படமாகவே இருந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மிகவும் அழகாக நேர்த்தியான உடையில் நடித்திருந்தார். இப்படம் சரியாக ஓடாததால் அதன்பின்னர் பூஜா ஹெக்டே தமிழ் படங்களை விட்டு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. அதனால்தான் தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக பூஜா இருந்து வருகிறார். அதன் மூலம்தான் தற்போது ஃபீஸ்ட் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் அவர் பீஸ்ட் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் இருந்து அவர் எடுத்து வெளியிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோ.

Pooja hegde

தமிழ் திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்பதே தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனவே ஃபீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தான் பூஜாஹெக்டே தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா? இல்லையா? என்பது நமக்கு தெரியவரும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago