Bharathi kannamma serial
விஜய் டிவியில் முன்னணி நாடகங்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே டாப்பாக தான் உள்ளது. தற்பொழுது இந்த நாடகத்தில் வில்லியாக நடித்த வெண்பா கர்ப்பமாக இருப்பதன் காரணமாக அவ்வளவாக வெண்பாவை நாடகத்தில் பார்க்க முடியவில்லை அதனாலோ என்னமோ நாடகத்தின் சுவாரசிய தன்மை சற்று கம்மியாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில ருசிகரமன நிகழ்ச்சி களும் நடக்கத்தான் செய்கிறது. முதலில் கண்ணம்மா வீட்டை விட்டு பல மைல் தூரத்திற்கு நடை பயணமாகவே நடந்து கொண்டே இருந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. நெட்டிசன்கலும் தங்கள் பங்கிற்கு கண்ணம்மாவை எங்கம்மா போகிறாய் விட்டால் நிலவிற்கு சென்றுவிடுவாய் என்று கண்ணம்மாவை கலாய்த்து தள்ளி விட்டனர்.
இப்போது இந்த நாடகம் மருத்துவமனையைச் சுற்றி அமைந்து வருகிறது. கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது வெண்பா அவளுக்கு விஷ ஊசி போட்டு விட்டாள் அதன் பாதிப்பாக கண்ணம்மா விற்கு லங்ஸ்சில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால் கண்ணம்மா அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். அது போதாதென்று அவர்களின் மாமியார் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு டென்ஷன் ஆவதன் காரணமாக அவருக்கு பிபி எகிறுகிறது. அதனால் அவரும் அடிக்கடி ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகி கொள்கிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலிக்கும் வெண்பா தவறான மாத்திரையை கொடுத்து கர்ப்பபையில் பிரச்சனை உண்டாக காரணமாகிறார். இதனால் அஞ்சலியும் அடிக்கடி கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு சென்று வருகிறார்
இதுமட்டுமில்லாமல் கண்ணம்மாவின் இரட்டைக் குழந்தைகளான ஹேமா மற்றும் லக்ஷ்மி ஆகிய இருவரும் அடிக்கடி வயிற்று வலி தலைவலி என்று மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். மேலும் தற்போது உச்ச கட்டமாக கண்ணம்மாவின் மாமனாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இதில் என்ன ஒரு சந்தேகம் என்றால் பாரதி தான் சிட்டிலேயே சிறந்த டாக்டர் என்று பெயரெடுத்தவர். ஆனால் அவர் குடும்பத்தினரோ மாறிமாறி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவது ரசிகர்களிடையே மிகப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் உண்மையிலேயே டாக்டர் தானா என்ற சந்தேகமும் வந்துள்ளது. இந்நாடகம் மருத்துவமனையை சுற்றியே நகர்வதால் அடுத்த கண்டெண்ட் கிடைக்கவில்லையா என்று நேரடியாகவும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் பாரதிகண்ணமா வின் ரசிகர்கள்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…