நான் சேரில் உட்கார்ந்தால் தனுஷ் கீழே உட்காருவான். ஆனால் இப்போது என்னை கண்டுகொள்வது கூட இல்லை. வேதனையுடன் கூறிய பிரபல நடிகர்.

பொதுவாக நடிகர்கள் பலருக்கு ஆரம்ப கால வாழ்க்கை என்பது வேறு மாதிரி இருக்கும், புகழின் உச்சிக்கு சென்றபிறகு வேறு மாதிரி இருக்கும். நடிகர் தனுஷை பொறுத்தவரை அவருடைய திரையுலக வாழ்க்கை படுவேகமாக வளர்ந்தது என்றே கூறலாம். அதற்கு மிக முக்கிய காரணம் அவரது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

Dhanush

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களுமே நம்மை பொறுத்தவரை உலகத்தரத்தில் உருவான படங்கள் தான். சமீபத்தில் கூட அசுரன் படம் சிம்மா விருதில் 6 விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. அதில் தனுஷிற்கு சிறந்த நடிகன் விருது கிடைத்துள்ளது.

இப்படி இன்று பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ள தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கினார் என்பது நாம் அறிந்ததே. இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் எம். ராமகிருஷ்ணன். இந்த படத்தில் நடிகர் ரமேஷ் கண்ணாவும் நடித்திருப்பார்.

சமீபத்தில் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டியில், தனுஷோடு துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி கூறுகையில், தனுஷ் இந்த அளவிற்கு ஒரு பெரிய நடிகராக வருவான் என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. ஆனால் அவன் அப்போதே என்னிடம் நன்றாக நடித்துள்ளான். நான் சேரில் உட்கார்ந்தால் அவன் தரையில் உட்காருவான்.

Thulluvadho ilamai movie still

என்னிடம் வந்து, எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறீர்கள் என்று கேட்பார். ஆனால் இன்று பல அவார்டகளை வாங்கி குவித்து வருகிறார். அவர் உண்மையில் சிறப்பான ஒரு நடிகர் தான். துள்ளுவதோ இளமை ஷூட்டிங் சமயத்தில் இணயக்குனர் செல்வராகவனுக்கும் தனுசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். தனுஷ் சரியாக நடிக்கவில்லை என்று செல்வராகவன் அவரை அடிக்க செல்வார்.

தனுஷ் என்னிடம் வந்து, பாருங்க சார் அண்ணன் அடிக்கவராரு என்று கூறுவார். நான் அவரிடம், விடுப்பா இயக்குனர் அபப்டி தான் இருப்பார் என்பேன். அப்படி இருந்த தனுஷ் இப்போது உச்ச நிலவுக்கு சென்றதும் என்னை ஒரு படத்தில் கூட நடிக்க அழைத்ததில்லை. இந்த தகவல் எல்லாம் தனுஷின் காதுக்கு எட்டவேண்டும் என்பதற்காக தான் நான் கூறுகிறேன் என்று சொல்லி முடித்தார் ரமேஷ் கண்ணா.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago