புகைப்பட செய்தி

நயன்தாராவுக்கு விரைவில் திருமணமா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

தமிழ் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களை மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். சில காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய பலவிதமான கருத்துகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. அவ்வாறு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சில வதந்திகள் எழும்பி வருகின்றனர். ஆனால் இதுவரையில் இவற்றைப்பற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருமமே எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

nayanthara

தொடர்ந்து ஆறு ஆண்டுகளுகளாக காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி டேட்டிங் செய்வதும், ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிக் கொள்வது என்பதும் சமீபகாலமமாக தொடர்ந்து நடைபெறுகிறது.

தற்போது இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும் குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்வதும் என தங்களின் மகிழ்ச்சியை குடும்பத்தினருடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இவர்கள் தங்களுடைய காதல் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் தான் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தின் பிரமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறினார். இதைக் கேட்ட இவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவர் கூறிய இந்த விஷயத்தை தொடர்ந்து இவரைப் பற்றிய செய்திகள் பலவாறு பரவ ஆரம்பித்தன. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் எனவே தனது கைவசமுள்ள திரைப்படங்களை முழுவதுமாக நடித்து முடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

vigneshsivan

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெரிய பட்ஜெட் படங்களை தனது கைவசம் வைத்திருந்தாலும் தற்போது இவரரின் திருமணத்தைப் பற்றிய பேச்சுகளும் உலாவருகின்றன. அதனைத் தொடர்ந்து நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்திற்காக தேதி நிச்சயக்கப்பட்ட தாகவும் புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

nayanthara

இதற்கிடையில் தற்போது விக்னேஷ் அவர்கள் தனது இணைய வலைத்தளத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நம்பவே முடியவில்லை ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று கேப்ஷன் வேறு வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களின் திருமணம் விரைவில் நடக்கப் போவதாகமுடிவவே செய்து விட்டனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago