Categories: டிவி

எம்டன் வடிவேலுவை மிஞ்சும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன். அட, இது அந்த சீன் தான என கூறிய ரசிகர்கள்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் கண்ணம்மா பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்கள் உள்ளன. இந்த இரண்டு சீரியலுக்கு மத்தியில் கடும் டிஆர்பி போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் ஆனந்தம், வானத்தைப்போல, எம்டன் மகன் போன்ற திரைப்படங்களின் கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. நான்கு அண்ணன் தம்பிகள், அவர்களின் மனைவிகள் அவர்களை கருவாகக் கொண்டு இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த அண்ணனும் அவர்களின் மனைவியும் தான் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மூத்த அண்ணன் தனது தம்பிகளுக்குகாக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து தன் தம்பிகளை படிக்க வைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பொழுது தான் அவரது மனைவி கர்ப்பமாகி உள்ளார். இதனால் அவர்களின் குடும்பமே ஆனந்த வெள்ளத்தில் உள்ளது.

ஆனால் இளைய தம்பியான கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவே காதல் ஏற்பட்டு இருந்த நிலையில் திடீரென்று சூழ்நிலை காரணமாக கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த போது வீட்டில் இருந்த மூன்று அண்ணன்களும் கண்ணனை திட்டி வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். இதனால் மனம் உடைந்த கண்ணன் ஐஸ்வர்யாவை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மிகவும் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருந்தார். தற்போது தான் கண்ணனின் அண்ணன்களான கதிர் மற்றும் ஜீவா அவனுக்கு உதவியதுடன் ஜீவாவின் மாமனார் கண்ணனுக்கு அவரது சூப்பர் மார்க்கெட்டில் வேலை போட்டுக் கொடுத்து இருந்தார்.

இப்படி நகர்ந்து கொண்டிருந்த நாடகத்தில் திருப்புமுனையாக கண்ணனின் அம்மா போன வாரம் எபிசோடில் உடல்நிலை சரியில்லாத நிலையில் இறந்துவிட்டதாக காட்டியிருந்தனர். ஆனால் இது தெரியாத கண்ணன் வேலை விஷயமாக திருச்சிக்கு சென்றுள்ளார், கையிலும் செல்போன் எடுத்து செல்லவில்லை. இதனால் அவனது அண்ணன்களும் அண்ணிகளும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். கண்ணன் எப்படியாவது வந்து விட வேண்டும் என்று அவர்கள் மாமனார் ஜனார்த்தனிடம் கூறினர். ஐஸ்வர்யா தனது பங்கிற்கு கண்ணனை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். ஆனால் கண்ணனிடம் செல்போன் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மூர்த்தியிடம் ஊர்க்காரர்கள் சடங்குகளை முடித்து விரைவில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்படி வற்புறுத்துகின்றனர். நேரத்தை கடக்க கூடாது இனியும் கடந்தால் ஊருக்கு மற்றும் வீட்டிற்கு நல்லதல்ல என்று ஊர்க்காரர்கள் சொல்வதை கேட்டு மூர்த்தி, ஜீவா, கதிர் மூன்று பேருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் ஊர்க்காரர்கள் செல்வதை போல அனைத்து சடங்குகளையும் செய்வதுபோல் போன வாரத்தில் நாடகம் முடிந்துள்ளது.

இந்த வாரம் கண்ணன், போஸ்டரை பார்த்து அம்மா இறந்து விட்டார்கள் என்ற செய்தியை தெரிந்து அம்மாவைத் தேடி வரும் ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலர், இது எம்டன் படத்தில் வடிவேலு அவர்களை நினைவுபடுத்துகிறது. வடிவேலு அவர்கள் தனது அம்மா இறந்துவிட இடுகாட்டில் வந்து கதறி அழும் நிகழ்வை போன்று அம்மா இறந்து விட்ட செய்தியை கேட்டு கண்ணன் இடுகாட்டில் கதறி அழுவது போல் உள்ளது என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக கண்ணன் அவரது அம்மா முகத்தை பார்ப்பாரா இல்லையா என்ற கேள்வி குறியுடன் இந்த வாரம் ப்ரோமோ உள்ளது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago