பொழுதுபோக்கு

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில்

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில்

பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டவர்களில் கவின் லாஸ்லியா ஜோடி எப்படி பேசப்பட்டதோ அதே அவரிற்கு பேசப்பட்டவர்கள் சேரன் மற்றும் லாஸ்லியா. சேரன் லாஸ்லியாவை மகளாகவும், லாஸ்லியா சேரனை தந்தையாகவும் ஏற்று அந்த சீசன் முழுக்க பயணித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளே கவினிற்க்கு சேரனை பிடிக்காது ஆனால் லாஸ்லியாவிற்கு சேரனை பிடிக்கும். இது குறித்த பல விவாதங்கள் அவர்களுக்குளேயே நடந்ததை நாம் பார்த்திருப்போம்.

பிக் பாஸிற்கு பிறகு கவின் மற்றும் லாஸ்லியா ஜோடி தங்களது காதலை தொடர்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் தங்கள் இருவருக்கும் இடையே தற்போதுவரை காதல் நீடிப்பதாக எந்த ஒரு தகவலையும் பகிரவில்லை. அதே சமயம் சேரன் லாஸ்லியா இடையே தந்தை மகள் உறவு நீடிக்கிறதா என்றால் அதுவும் சந்தேகம் தான்.

பிக் பாஸிற்கு பிறகு லாஸ்லியா பல்வேறு போட்டோ ஷூட்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். தற்போது அவர் நடிப்பில் பிரண்ட்ஷிப் படம் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இதில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் சேரன், தனது சமூக வலைதள பக்கம் மூலம் லாஸ்லியாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து சேரனின் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். அதில் ஒருவர், “அந்த பெண் தான் உங்களை மதிப்பதில்லையே. நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள். இது போன்ற பெண்களுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்திவிட்டு ஒரு ஏழை பெண்ணிற்கு உதவினால் புண்ணியமாவது கிடைக்கும். உங்கள் மகள்கள் உங்களை திட்ட மாட்டார்களா? நான் உங்கள் மகளாக இருந்திருந்தால் இந்த பதிவிற்காக உங்களை நிச்சயம் திட்டி இருப்பேன்” என்று கூறி இருந்தார்.

இதற்க்கு பதிலளித்த சேரன், “அதை எல்லாம் விட்டுவிடுங்கள், நிகழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்திருக்கலாம். இப்போது எல்லாம் மாறி, அவர் நிறைய இழந்து, இப்போது நல்ல முயற்சிகள் எடுக்கும்போது, அதையெல்லாம் மறந்து நாம் வாழ்த்த வேண்டும். அது தானே நம் மண்ணின் மாண்பு. தவறு யாரிடம் இல்லை.” இவ்வாறாக அவர் பதிலளித்திருந்தார்.

சேரனின் இந்த பதில் பலராலும் பாராட்டப்படுகிறது. அதே சமயம் அவர் இன்னும் லாஸ்லியா மீதி அதா பாசத்தை கொண்டுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். லாஸ்லியா தந்து தந்தையை இழந்துள்ள நிலையில் சேரன் அவருக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தால் சந்தோசம் தானே.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago