Categories: டிவி

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரையும் ஜீவாவின் மனைவியையும் பார்த்திருக்கீங்களா? இதோ புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வார வாரம் ஏதாவது ஒரு புது விஷயம் இந்த தொடரில் நடந்துகொண்டே இருக்கும். ஆகையால் தங்கு தடை இல்லமால் டி.ஆர்.பி யில் தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. குடும்ப பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றுமையான அண்ணன் தம்பிகளாக, மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் இருக்கின்றனர். இவர்களில் கண்ணன் சில எதிர்பாராத சூழ்நிலைகளாக காதல் திருமணம் செய்துகொள்ள, அதனால் அவரை வீட்டை விட்டு போக சொல்லிவிடுகின்றனர் மற்ற மூன்று அண்ணன்களும் அவரின் தாயாரும்.

இப்படியாக இந்த சீரியல் சென்றுகொண்டிருகிறது. இந்த சீரியலில் இரண்டாவது அண்ணனின் மனைவியாக மீனா என்னும் கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடிக்கிறார். இரண்டவது அண்ணனான ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த ஜோடியும் சீரியலில் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான்.

மீனா கதாபாத்திரம் இந்த சீரியலில் வரும்போதெல்லாம் குறும்புத்தனம் சற்று தூக்கலாகவும், அது ரசிக்கும்படியாகவும் இருக்கும். மீனாவுக்கு சமீபத்தில் நிஜவாழ்விழும், சீரியலிலும் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீனா மற்றும் ஜீவாவின் உண்மையான ஜோடிகள் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

ஜீவா என்கிற வெங்கட் ரங்கநாதனின் மனைவி பெயர் அஜந்தா. இவர் ஒரு புகைப்படக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடிக்கும் உண்மையில் தேஜா என்ற ஒரு மகள் உண்டு. மீனா என்கிற ஹேமாவின் கணவர் பெயர் சதீஷ். இந்த ஜோடிக்கு ஷாத்விக் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் தான் ஷாத்விக்கிற்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago