Categories: டிவி

சில வருடங்களுக்கு முன்பு கிளப்பில் பாடிய ஸ்ரீதர் சேனா. வாயடைத்துப் போய் உட்கார்ந்த ஜேம்ஸ் வசந்த்தன். அவரே கூறிய தகவல் இதோ.

இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் அத்தனை சீசன்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் ஆரம்பத்தில் யாரென தெரியாதவர்களாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே செல்லும் பொழுது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர். அதேபோல் தற்போது நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 8 சீசனுக்கும் நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த சீசனில் வெற்றிபெற்ற ஸ்ரீதர்சேனா அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிளப்பில் பாடிய பாட்டை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.

Sridhar Sena Super singer 8

இருபத்து ஐந்து வயதாகும் ஸ்ரீதர் சேனா அவர்கள் கோயம்புத்தூரில் பிறந்தவர். தனது பட்டப்படிப்பையும் கோயம்புத்தூரில் தான் முடித்துள்ளார். இவர் நன்றாக பாடுவதுடன் மிகவும் அருமையாக இசையமைக்கவும் செய்கிறார். அவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னர் ஜீ தமிழ் சரி கம பா எனும் முன்னணி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஒரு சிறந்த போட்டியாளராக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இவர் பாடும் பாட்டை ரசிப்பதற்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

தொடர்ந்து நன்றாக பாடி ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற ஸ்ரீதர் சேனா திடீரென போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர்களின் ரசிகர்கள் அவரை போட்டியிலிருந்து விலக்கிய நடுவர்களை சரமாரியாக திட்டி தங்கள் பக்கத்தில் பதிவிட்டுருந்தனர். இதனால் அதிகம் பாதித்த பென்னி அவர்களும் கூட அடுத்த சீசனில் தான் நடுவராக பங்கேற்கப் போவதில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் சேனா வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவர் தனது முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்து நன்றாக பாடி இறுதியில் சூப்பர் சிங்கர் சீசன் 8ன் டைட்டில் பட்டத்தையும் வென்று விட்டார்.

Sridhar Sena Super singer 8

இதனால் இவருடைய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இவ்வளவு திறமை மிக்க ஸ்ரீதர் சேனா அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிளப்பில் பாட்டு பாடி கொண்டிருந்திருக்கிறார். ஒரு சமயம் அங்கு சென்றிருந்த ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் ஸ்ரீதர் சேனா பாடிய பாடலை கேட்டு மிகவும் வியப்புடன் வாயடைத்துப் போய் அப்படியே அமர்ந்திருக்கிறார். அந்த அளவிற்கு ஸ்ரீதர் சேனா பாடிய பாடல் இவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 8ல் ஸ்ரீதர் சேனாவின் வெற்றிக்கு முன்பே ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கூறியது என்னவென்றால், நான் ஒருசமயம் வெளிநாட்டில் ஒரு கிளப்புக்குள் சென்றபோது அங்கே ஒரு அற்புதமான பாட்டை கேட்டேன். CDயில் அந்த பாடல் பிலே செய்யப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு நான் உள்ளே சென்று அமர்ந்தபோது தான் தெரிந்தது அங்கே ஒரு இளைஞன் லைவில் அந்த பாடலை அவ்வளவு சுருதி சுத்தமாக பாடிக்கொண்டிருக்கிறான் என்பது.

James vasanthan

பிறகு சூப்பர் சிங்கர் 8 நடந்துகொண்டிருந்த சமயத்தில் தான் என் மனைவி என்னிடம், அந்த இளைஞன் சூப்பர் சிங்கரில் பங்கேற்று வைல்ட் கார்டில் வெளியேறி ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார், அவர் பெயர் ஸ்ரீதர் சேனா என்று கூறினார். அதை கேட்டு நான் வியப்படைத்தேன். உடனே எனக்கு தெரிந்துவிட்டது, இந்த வருடம் சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று என கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்பொழுது ஸ்ரீதர் சேனா அவர்களும் அவரது ரசிகர்களும் சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். ஸ்ரீதர் சேனாவிற்கான வாழ்த்துகளை ரசிகர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் மாறி மாறி பகிர்ந்து வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago