Categories: மூவிகள்

பொன்னியின் செல்வன் படத்திற்காக எக்கச்சக்கமாக எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகர் பிரபு. புகைப்படம் இதோ

மணிரத்தினம் இயக்கத்தின் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு பலர் பேர் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதை தொடர்ந்து மணிரத்தினம் அவர்கள் இதை செய்துகாட்டி உள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் அதன் மற்ற வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

Ponniyin Selvan

இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அமர்கள் கல்கி அவர்களின் அமர காவியமான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான நந்தினி மற்றும் ஊமை ராணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இப்படி எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரமும் மிக முக்கியம் தான் என்பது பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் அறிவர்.

இந்த படத்தில் பிரபு, அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அநிருத்த பிரம்மராயர் என்பவர் சுந்தர் சோழர் ஆட்சி காலத்தில் முதல் மந்திரியாக இருந்தவர். இவர் சுந்தர சோழருக்கு நண்பரும் கூட. இந்த கதாபாத்திரமும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபு தனது எடையை அதிக அளவில் குறைத்துள்ளார். அவரின் மெலிந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

prabhu

இந்த படத்தை பொறுத்தவரை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் உள்ளதை அப்படியே எடுக்காமல், அந்த கதையின் சிகரங்களாக மின்னும் சம்பவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு கதை அமைத்துள்ளனர். அடுத்தவருடம் , அதாவது 2022 இல் இந்த படம் திரை அரங்கிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தாமதமானது. இல்லை எனில் இது இந்த வருடம் வெளியாகி இருக்க வேண்டிய படம்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago