பொழுதுபோக்கு

படப்பிடிப்பின் இடையே பிரபல நடிகையுடன் பைக்கில் லடாக்கிற்கு லாங் டிரைவ் சென்ற அஜித் ..

தமிழ் திரை ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார், வயது 51. தமிழ் திரை உலகின் முன்னனி ஸ்டார் நடிகராகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விழங்கும் நடிகர் அஜித்திற்கு ரசிகர் பட்டாளம் ரொம்ப அதிகம் தான்.

பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார், அவ்வப்போது தன் சூப்பர் பைக்கில் லாங் டிரைவ் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருடைய பைக் லாங் டிரைவ் புகைப்படங்கள் பல சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

தற்போது நடிகர் அஜித் குமார் இயக்குநர் H.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தை AK61 என்று அழைத்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர், வயது 43, நாகர்கோவிலில் பிறந்து கேரள மாநிலம் திரிச்சூரில் வளர்ந்த நடிகை, மற்றும் பின்னனி பாடகி, ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மூலமாக இயக்குநர் H வினோத் நடிகர் அஜித் குமாரை தொடர்ந்து 3வது முறையாக இயக்குகிறார்.இந்த படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். முழுமையான ஆக்ஷன் பிலாக் படமாக AK61 படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு வட இந்திய எல்லை பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

AK61 படத்தில் நடிகர் அஜித் குமார் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தன்னுடைய பைக் ரைடிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தன் படத்தின் நாயகி மஞ்சு வாரியருடன் நடிகர் அஜித் குமார் வட இந்திய எல்லையான லடாக் பகுதிக்கு பைக்கில் லாங் டிரைவர் சென்றார்.

நடிகர் அஜித் குமாருடன் பைக்கில் லாங் டிரைவ் சென்ற அனுபவத்தை நடிகை மஞ்சு வாரியர் தன் சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17854 அடி உயரத்தில் உள்ள கக்சங் லா என்னும் இடத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தனக்கு லாங் டிரைவ் செல்வது ரொம்ப பிடிக்கும், பல முறை ஆயிரக்கணக்கான மைல்கள் என் காரில் லாங் டிரைவ் சென்றுள்ளேன், ஆனால் பைக்கில் லாங் டிரைவ் செல்வது இதுவே முதல் முறை. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு நன்றி என நடிகை மஞ்சு வாரியர் தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago