Categories: மூவிகள்

கெட்ட வார்த்தை பேசுகிற நடிகை ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியா ? யார் அது?

திறமையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டால், ஹிந்தி சினிமா வரை ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். பின்னர் படிப்படியாக சினிமாவில் முன்னேறியவர். வெள்ளை நிறமாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்ற கோட்பாட்டை மாற்றியவர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, க/பெ ரணசிங்கம் முதலிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பிற்கு சிறந்த உதாரணங்கள்.

தமிழ் சினிமாவில் இவர், நீதானே அவன் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்..பின்னர் கட்டப்பாவ காணோம், ஹலோ நான் பேய் பேசுறேன், கனா,வட சென்னை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் வடசென்னை திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகளில் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் ஜோமோண்ட், சுவிசேஷங்கள், ஜானகி போன்ற மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார. ரம்பன்டு, கௌசல்யா, ஜெகதீஷ் கிருஷ்ணமூர்த்தி போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற இந்தி படத்திலும் கூட இவர் நடித்துள்ளார்.

ஒடிடி தளத்தில் கூட திட்டம் 2 பூமிகா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் கைவசம் தற்போது அதிகமான படங்கள் உள்ளன. பிரபுதேவாவுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் அர்ஜுன் உடன் ஒரு புதிய கிரைம் திரில்லர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. நடிகர் அர்ஜுன் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

ஆக்ஷன் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் அர்ஜுன் தற்போது தினேஷ் லக்ஷ்மணன் இயக்க உள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிக்க உள்ளார் இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசிரியராகவும், ஆக்சன் கிங் அர்ஜுன் துப்பறியும் நிபுணராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் ஐ விட புத்திசாலித்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கதையை எனக்கு தினேஷ் லக்ஷ்மணன் சொல்லியபோது மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை தரும் படமாக அமையும் என்று நடிகர் அர்ஜுன் இந்த படத்தைப்பற்றி கூறியுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் விரைவில் படத்தின் பெயர் முடிவு செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago