ட்ரெண்டை உருவாக்கிய வடிவேலுவின் பிறந்தநாள். துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த சேரன்

விஜயகாந்தை எதிர்த்து அரசியல் பேச்சு, இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நடிகர் வடிவேலு சில வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போயிற்று. இருப்பினும் ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை. அவர் சம்மந்தப்பட்ட மீம்ஸ்கள், ஹாஸ்டேக்குகளை உருவாக்கி தெறிக்க விடுவர். இந்நிலையில் வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாளான நேற்று ( Sep 12) வடிவேலுவுக்கு பல பிரபலங்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இயக்குனர் ஷங்கர் தடை உத்தரவு வாங்கினார். மெர்சல் படத்தில் நடித்த பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக வடிவேலு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் போயிற்று. லைக்கா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலு இடையேயான பிரச்சினைக்கு தீர்வளித்தது.

நடிகர் வடிவேலு லைக்கா நிறுவனத்திற்கு 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து, வடிவேலு அவர் நடிக்கவிருக்கும் நாய்சேகர் படம் தொடர்பான தகவல்களையும், மீண்டும் படம் நடிக்க போகும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்  நடிப்பதற்கான தடை நீங்கியதும், மறுபடியும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதும் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, வடிவேலு கைகூப்பி, விட்டுவிடுங்கள், வேறேதும் கேள்விகளை கேளுங்கள் என நழுவிக்கொண்டார். ரசிகர்கள் அவர் எப்போது திரையில் தோன்றுவார் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சேரனின் வாழ்த்து:
இந்நிலையில் இயக்குனர் சேரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்த விதம் வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் சேரன் இயக்கிய வெற்றிகொடிக்கட்டு படத்தில் வடிவேலு நடித்த துபாய் ரிட்டர்ன் கேரக்டரின் சாயலிலேயே,”நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்! நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா” என வடிவேலுக்கு சேரன் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இந்த வாசகத்தை வைரலாக்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி #HBD வடிவேலு என்ற ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி அவர் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். 61 வயதை எட்டியுள்ள வடிவேலுவை நாமும் வாழ்த்துவோம்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago