புகைப்பட செய்தி

அப்படியே அப்பாவைப் போல் இருக்கும் பிரபல நடிகரின் மகன். பிறந்த நாளன்று மகனின் போட்டோவை வெளியிட்ட அம்மா ஐஸ்வர்யா

தமிழ் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். ஹாலிவுட் படங்கள் வரையும் சென்று நடித்துவிட்டு தற்போது கோலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்ததாக நான்கு படங்களை ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ் அவர்கள். பல நாட்களுக்குப் பிறகு இவரது படங்களான மாறன், திருச்சிற்றம்பலம் போன்றவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

dhanush

தனுஷ் பிரபல இயக்குனரின் மகன் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திரையுலக வட்டாரத்தில் பெரும் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் திரையுலக வட்டாரத்தில் யாரும் செய்திடாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் ஒரு மாளிகையைக் கட்டிக் கொண்டிருக்கிறார். சற்று நாட்களுக்கு முன்னர் இந்த விஷயம் தொடர்ந்து பலராலும் ஆச்சரியமிக்க வகையில் பேசப்பட்டு கொண்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷிற்கு இடையில் பிரச்சனை உள்ளதாகவும் அவர்கள் பிரியப் போகிறார்கள் எனவும் கூட பல வதந்திகள் பரவி கொண்டிருந்தன.

aishwaryadhanush

தமிழ் திரையுலகின் பிரபலங்கள் என்றாலே இவ்வாறான கிசுகிசுக்களும் தேவையில்லாத வதந்திகளும் வருவதென்பது வழக்கம் தானே. அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் 15 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றியும் தனது மகனைப் பற்றியும் ஐஸ்வரியா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப்பதிவு தொடர்ந்து வைரலாகி கொண்டு வருகிறது.

sons

இந்த பதிவில் தனது மகனை கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு உனக்கு அம்மாவாக இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், என் முதல் குழந்தையான உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.

உன்னை பெற்றதற்கு நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு வேண்டிய அனைத்தையும் கடவுள் கொடுத்தருள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட தனது மகனின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் யாத்ரா விற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு நிறுத்திவிடாமல் காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் அவர்கள் இருப்பதைப் போலவே இவரும் அப்படியே அவர் அப்பாவை போன்றே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago