புகைப்பட செய்தி

ராதிகா சரத்குமாரின் மகனா இவர். பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே என்று அவரது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று சொல்லக்கூடியவர் தான் நடிகர் சரத் குமார் அவர்கள். நமது தமிழ்நாட்டில் பல காலங்களாகவே நடிப்பு துறையில் இருப்பவர்கள் அவர்களின் நடிப்பிற்கு பிறகு அரசியலில் இறங்குவது என்பது வழக்கமாக தான் இருக்கிறது. அவ்வாறு தனது நடிப்பினையும் தொடர்ந்து கொண்டு அரசியலிலும் பணியாற்றி வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் திரைப்படங்களை விட அரசியலில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

sarathkumar

90-களில் இருந்து தொடர்ந்து கதாநாயனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் கதாநாயகனாகவும் வலம் வர ஆரம்பித்தார். பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து மக்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார்.

தமிழ் திரை உலகில் நடிகர்களின் திருமண வாழ்க்கை என்பது சற்று போராட்டமாகத்தான் இருக்கிறது திரையுலக நட்சத்திரங்கள் மட்டும் ஏன் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

radhiga

சரத் குமார் அவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்து அதன் பின்னர் முன்னணி நடிகையான ராதிகா அவர்களை மணந்து கொண்டார். தமிழ் சீரியல்களில் மட்டுமல்லாமல் பலவித வெற்றி தமிழ் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்தவர் தான் ராதிகா அவர்கள்.

நடிகை ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவரின் குறும்புத்தனமான நடிப்பிற்கென்று இவருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது புகழை நிலை நிறுத்தியுள்ளார் ராதிகா. சித்தி, செல்வி, வாணி ராணி என்ற சூப்பர் ஹிட் சீரியல்களையும் கொடுத்துள்ளார்.

son in law

சரத்குமார் அவர்களுக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகி அதன் பின்னர் மூன்றாவதாகத் தான் ராதிகா அவர்களை திருமணம் செய்துள்ளார். ராதிகாவுக்கும் அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்ட் என்பவருக்கும் பிறந்தவர் தான் ராயன் ஹார்டி. கடந்த 2014ஆம் ஆண்டு தான் இவருக்கு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ராதிகா தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களும் வலைத்தளங்களில் பரவலாகி கொண்டிருக்கின்றன.

sarath son

ராதிகா சரத்குமார் இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார். தற்போது இவர் சிங்கப்பூரில் தனது படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இவரது பிறந்த நாள் புகைப்படங்களைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் சிறுபிள்ளையாக இருந்த ராகுல் இவ்வளவு பெரியவராக வளர்ந்து விட்டாரா என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள். தற்போது ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago