பொழுதுபோக்கு

மாடர்ன் உடையில் டாப் ஆங்கிலில் தமிழ் செல்வி கொடுத்த போஸ். இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

சீரியல்கள் மற்றும் சினிமாக்கள் மூலம் தமிழ் மக்களிடையே பரிச்சயமானவர் நடிகை தமிழ் செல்வி. கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போது துணை நடிகையாகவும், சீரியல்கள் சிலவற்றில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவர் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவருடைய படங்கள் சில வைரலாகி வருகிறது.

Tamil selvi

கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு மேலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் மௌனராகம் சீரியல் பார்த்த அனைவருக்கும் இவர் பரிச்சயம்.

மௌனராகம் சீரியலில் இவர் கார்த்திக்கின் அண்ணியாக நடித்திருப்பார். அதோடு சக்தியை தனது மகளாக கருதி வளர்ப்பார். ஏனோ தெரியவில்லை, மௌனராகம் சீசன் 2 ல் இவரையும் இவரது கணவர் கதாபாத்திரமான முரளியையும் காணவில்லை. மௌனராகத்தை தொடர்ந்து தற்போது “நம்ம வீட்டு பொண்ணு” சீரியலிலும் இவர் நடித்து வருகிறார்.

Tamil selvi

சமீபத்தில் தான் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வவ்போது சில தகவல்களை பகிர்வது வழக்கம். அப்படியாக சமீபத்தில் இவர் பகிர்ந்த ஒரு தகவல் வைரலானது. அதாவது ஆண்கள் wifi போன்றவர்கள் என்றும் பெண்களை ப்ளூடூத் போன்றவர்கள் என்றும் இவர் கூறி இருந்தார். அதற்கான விளக்கத்தையும் கூறி இருந்தார்.

Tamil selvi

நாம் இவரை படங்கள் மற்றும் சீரியலில் புடவையில் தான் பார்த்திருப்போம். ஆனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களில் மாடர்ன் உடையில் அசத்தலாக இருப்பார். இவருக்கென்று இன்ஸ்டாகிராமில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே போல விடீயோக்களையும் இவர் வெளியிடுவதுண்டு.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago