நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார். இவர் லியோ காபி விளம்பரத்தில் நடிகர் மற்றும் விஜே சிவாவுடன் லியோ காபி விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மற்றும் பாடல் மட்டும் அல்லாமல் டப்பிங்கும் செய்து வருகிறார்.பிறகு ஆண்ரியா கொஞ்ச நாட்கள் இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம்ஒன்றால் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவென்ஜர் எண்டு கேம் என்னும் ஹாலிவுட் படத்தில் நட்டாஷாவுக்கு தமிழ் டப்பிங் செய்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன், துப்பறிவாளன், வட சென்னை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். நடிகர் விஜய் அவர்களோடு நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் பாடல் ஒன்றிலும் கொஞ்சம் காட்சிகளில் மட்டும் நடித்தது ரசிகர்கள் இடையே ஏமாற்றம் ஏற்பட்டது.
இவர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அதில் அண்மையில் புஷ்பா படத்தில் பாடிய பாடல் “ஓ சொல்றியா மாமா” என்னும் பாடல் ஹிட் அடித்தது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் ஆண்ட்ரியா, தற்போது பாவாடை தாவணியில் மண் மணமாறாத கிராமத்து பெண்ணாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஆண்ரியாவா இது என ஆச்சரியத்தில் உள்ளனர்.
தற்போது அவர் கைவசம்
துப்பாக்கி முனை, பிசாசு 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் பிசாசு 2 படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…