Homeபுகைப்பட செய்திபாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாகவே மாறிய ஆண்ட்ரியா - அருமையான புகைப்படம்

பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாகவே மாறிய ஆண்ட்ரியா – அருமையான புகைப்படம்

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார். இவர் லியோ காபி விளம்பரத்தில் நடிகர் மற்றும் விஜே சிவாவுடன் லியோ காபி விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மற்றும் பாடல் மட்டும் அல்லாமல் டப்பிங்கும் செய்து வருகிறார்.பிறகு ஆண்ரியா கொஞ்ச நாட்கள் இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம்ஒன்றால் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவென்ஜர் எண்டு கேம் என்னும் ஹாலிவுட் படத்தில் நட்டாஷாவுக்கு தமிழ் டப்பிங் செய்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன், துப்பறிவாளன், வட சென்னை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். நடிகர் விஜய் அவர்களோடு நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் பாடல் ஒன்றிலும் கொஞ்சம் காட்சிகளில் மட்டும் நடித்தது ரசிகர்கள் இடையே ஏமாற்றம் ஏற்பட்டது.

இவர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அதில் அண்மையில் புஷ்பா படத்தில் பாடிய பாடல் “ஓ சொல்றியா மாமா” என்னும் பாடல் ஹிட் அடித்தது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் ஆண்ட்ரியா, தற்போது பாவாடை தாவணியில் மண் மணமாறாத கிராமத்து பெண்ணாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஆண்ரியாவா இது என ஆச்சரியத்தில் உள்ளனர்.

andrea

தற்போது அவர் கைவசம்
துப்பாக்கி முனை, பிசாசு 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் பிசாசு 2 படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

சற்று முன்