மூவிகள்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சர்தார்- ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா- ஒரு பார்வை.

தமிழ் திரை உலகில் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குநர் பாரதி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “கள்ளழகர்”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா, வயது 41, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.

நடிகை லைலா கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான “திருப்பதி” படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் ஒரு மலையாள படத்தில் நடித்த நடிகை லைலா 2006ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். நடிகை லைலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

திருமணத்திற்கு பின் நடிப்புக்கு பை பை சொல்லி விட்டு தன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ஆம் ஆண்டு சீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான “டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்” என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் நடிகை லைலா. இந்த நிலையில் 16 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை லைலா.

இயக்குநர் PS மித்ரன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். “சர்தார்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு நடிகை ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ளார். 16 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா உலகில் ரீஎன்ட்ரி ஆகும் நடிகை லைலா இந்த படத்தில் “மங்கை” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டனர். ப்ரின்ஸ் பிக்ச்சர்ஸ் என்ற பேனரில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

கிட்டதட்ட 16 ஆண்டுகள் கழித்து நடிகை லைலா மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது 90’s கிட்ஸ்களுக்கு நிச்சயமாக சந்தோசமான செய்தியாகவே இருக்கும் என சிலர் சமூக வலைதள பக்கங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த கட்டுரை பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பன்னுங்க.. தளத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago