பொழுதுபோக்கு

விஜயின் யூத் பட நாயகியா இது. இப்போ கணவன் மற்றும் குழந்தையோடு ஆளே மாறிட்டார் பாருங்க.

தமிழ் திரை உலகில் இன்றைய நிலையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது தளபதி விஜய் தான். விஜய் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் யூத் படமும் ஒன்று. கடந்த 2002 ஆண்டு வெளியான யூத் படத்தை இயக்கியவர் இயக்குனர் வின்சென்ட் செல்வா.

அந்த திரைப்படத்தில் வெளியான ஆல்தோட்ட பூபதி பாடலில் விஜயின் நடனம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அந்தப்பாடலில் சிம்ரன் விஜய்க்கு ஈடு கொடுத்து சிறப்பாக நடனமாடி இருப்பார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாஹீன் கான். இந்த நடிகை குறித்தும் இவர் தற்போது என்ன செய்கிறார் என்பது குறித்தும் இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

நடிகை சாஹீன் கான் தன் படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் பணியாற்றினார். அப்போது அவர் பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் அந்த விளம்பரம் அனைவரையும் சென்றடைந்தது.

அந்த விளம்பரத்தின் மூலம் சாஹீன் கானுக்கும் பட வாய்ப்புகள் தேடி வந்தன. அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு தெலுங்கில் “சிறு நவ்வுடோ” என்ற படத்தில் முதன் முதலாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு கன்னடா மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்தார்.

2002 ஆம் ஆண்டு யூத் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அவர் பரிச்சயம் ஆனார். ஆனால் ஏனோ யூத் படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படமும் நடிக்க வில்லை. யூத் படம் என்பது அவர் நடித்த முதல் படமான “சிறு நவ்வுடோ” படத்தின் ரீமேக் என்பது குறிப்பிட தக்கது.

“சிறு நவ்வுடோ” தமிழில் மட்டும் அல்லாமல் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. தமிழ், தெலுகு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் சந்தியா. ஆகையால் அவர் சந்தியா என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுவதுண்டு.

இவர் மும்பையை சேர்த்த ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு. தற்போது இவர் படங்கள் எதிலும் நடிக்காமல் தன் குடும்பதோடு நேரத்தை செலவழித்து வருகிறார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago