விஜய் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. ராஜா ராணி பாகம் ஒன்றில் ஆலியா மானசா ஒரு வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார். பிறகு அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் மணந்துகொண்டார். அதன் பிறகு ராஜா ராணி 2 தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி இரண்டாம் பாகத்திலும் ஆலியா மானசா தான் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலை பொறுத்தவரை சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் ஒரு நன்கு படித்தவர். ஆனால் படிக்காத ஒரு ஸ்வீட் கடைக்காரரை தன் அண்ணனின் சூழ்ச்சியால் திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு பிறகு தான் தன் கணவர் படிக்காதவர் என்று இவருக்கு தெரிகிறது.
அதே போல இவர் நன்கு படித்தவர் என்பதும் மணமகன் வீட்டாருக்கு திருமணத்திற்கு பின்பு தான் தெரிகிறது. இதனால் சந்தியாவின் மாமியாருக்கு சந்தியாவை பிடிக்காமல் போகிறது. சந்தியாவின் மாமியாராக இதில் நடிப்பவர் பிரவீனா. மலையாளம் மற்றும் தமிழில் பிரவீனா இதற்க்கு முன்பாகவே ஏராளாமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கேரள அரசு இவருக்கு, இரண்டாவது சிறந்த நடிகைக்கான விருதை வழங்கி உள்ளது. இது தவிர இன்னும் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். நடிப்பு மட்டும் அல்லாமல் இவர் ஒரு சிறந்த பின்னணி குரல் கலைஞரும் கூட.
தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரை தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி இப்படி ஏராளமான படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். அதே போல சன், கலைஞர், விஜய் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் இதற்க்கு முன்பு நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய இளம் வயதில் திரைப்படம் ஒன்றிற்காக பீச்சில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சியில் அவர் யாரோ ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறார். அதன் வீடியோ இதோ.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…