பொழுதுபோக்கு

திரைப்படத்தில் நடிக்கப்போகும் இயக்குனர் சங்கரின் மகள். எந்த படம், யாருக்கு ஜோடி தெரியுமா?

இந்திய சினிமாவை பொறுத்தவரை பிரமாண்டத்திற்கு பெயர்போனவர் இயக்குனர் சங்கர் அவர்கள். கடந்த 1993 ஆம் ஆண்டு ஜென்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராகி அதே படத்தில் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் சங்கர். இன்று இவருடைய இயக்கத்தில் நடிக்க பலரும் தவம் கிடக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் இப்படி பலரை வைத்து இவர் அற்புதமான பல படைப்புக்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகப்போகும் படம் குறித்த விவரம் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு “விருமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இதற்கு இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க உள்ளார்.

மீண்டும் கார்த்தியும், முத்தையாவும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தை 2D எண்டெர்டைன்மெண்ட் மூலம் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைத்து தயாரிக்கின்றனர்.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான திரு சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் அவர்களை விருமன் பட குழுவில் இணைய அன்புடன் வரவேற்கிறோம் என்ற வாசகத்தோடு நேற்று விருமன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago