Categories: மூவிகள்

என்னது, தலைவி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவா? தயாரிப்பாளர் தலையில் துண்டு தான் போல.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக திரையரங்குகளில் வெளியான படம் “தலைவி”. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இது மறைந்த முன்னாள் முதலவர் செல்வி ஜெயலலிதாவின் பயோ பிக் என்பதால் முதல் நாளே இந்த படத்தின் வசூல் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் மற்ற மாநிலங்களிலும் நல்ல ஒரு வசூலை எதிர்பார்த்தனர். முதல் நாள் சுமார் 20 முதல் 25 கோடி வரை இந்த படம் கலெக்ட் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் வட இந்தியாவை பொறுத்தவரை இந்த படத்தின் மொத்த முதல் நாள் வசூல் 20 முதல் 25 லட்சம் என்று கூற படுகிறது.

அதே சமயம் தமிழகத்தை பொறுத்தவரை 80 லட்சம் வரை முதல் நாள் வசூல் இருந்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக பார்த்தல் 1 முதல் 1.5 கோடி தான் இந்த படம் முதல் நாள் கலெக்ட் செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.

பல நாட்களை கடந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்திலேயே திரையருங்கள் பல நிரம்பாத நிலை உள்ளது. திரையரங்க வசூலை நம்பி தான் படத்தை OTTயில் கூட தாமதமாக வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிடலாம் என்று கங்கனா ரனாவத் எண்ணி இருந்தார். இந்த படத்திற்காக அவர் தமிழகம் வந்து படத்தை பிரமோட் கூட செய்திருந்தார். ஆனால் படத்தின் வசூல் இப்படி இருப்பதால் அவருக்கு இது நிச்சயம் ஏமாற்றமாக தான் இருக்கும்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago