Categories: மூவிகள்

தாஜ்மகாலுக்கு பரந்த சிவகார்த்திகேயன். எல்லாம் ரொமான்ஸ் தான் காரணமா?

தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் ஜொலிப்பவர்கள் வெகு சிலர் தான். அதில் பலருக்கும் முன்னோடியாக இருப்பவர் சிவ கார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருக்கும்போதே இவர் தனது திறமைகளை பன்மடங்கு வளர்ந்துகொண்டவர். காமெடி முதல் டான்ஸ் வரை அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பினார்.

அதன் பலனாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கின. அடுத்தடுத்து அவர் நடித்த படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இவர் நடித்த படங்களில் காமெடியை மையமாக வைத்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, சிவாவிற்கு காமெடியை தவிர வேறெதுவும் வராது போன்ற கருத்துக்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவின.

அந்த கருத்துக்களை பொய்யாக்கும் முயற்சியில் இறங்கிய சிவா, வேலைக்காரன், ஹீரோ போன்ற படங்களில் நடித்தார். அவருடைய நடிப்பு அந்த படங்களில் பேசப்பட்டாலும் வியாபார ரீதியாக அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் அண்ணன், தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து, “நம்ப வீட்டு பிள்ளை” என்ற படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்த படம் வியாபார ரீதியாக நல்ல ஒரு படமாக அமைந்தது. நடிப்பது மட்டும் அல்லாமல், பாடல் பாடுவது, திரைப்படம் தயாரிப்பது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் படம் “டான்” சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்தியேனும் இந்த படத்தின் கோ ப்ரொடியூசாறாக உள்ளார். பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அந்த படத்தின் ஹீரோயின் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் தாஜ்மகால் முன்பு நிற்பது போன்ற சில புகைப்படங்களை அந்த படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அங்கு ஒரு காதல் பாடலோ அல்லது ரொமான்ஸ் காட்சியோ படமாக்கப்படலாம் என்று ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago