டிவி

விஜய் டீவியில் ஒளிபரபாகவுள்ள புதிய சீரியலில் மீண்டும் நடிக்க உள்ள லட்சுமி அம்மாள். என்ன வேடம் யார் நாயகி தெரியுமா?

பாண்டியன் ஸ்டோரீஸ் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் தான் லட்சுமி அம்மாள். இவருடைய உண்மையான பெயர் ஷீலா. பாண்டியன் ஸ்டோர்ஸில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம் அனைவர் மனதையும் இவர் கவர்ந்தார். நாலு பிள்ளைகளுக்கு தாயாக நடித்த இவர், அந்த சீரியலில் பக்கவாதம் காரணாமாக வீல் சேரில் இருக்கும்படியான காதாபாத்திரத்தில் நடித்தார்.

Sheela pandian stores

சமீபத்தில் அந்த சீரியலில் அவர் இறந்துவிடுவது போல காட்சிகள் வெளியாகின. ஒரு வாரம் முழுக்க ஒளிபரப்பப்பட்டு அந்த காட்சிகள் TRPயில் அந்த சீரியலை முன்னிலைக்கு கொண்டு வந்தது. அதே சமயம் இந்த கதாபாத்திரத்தை ஏன் முடித்துவைத்தீர்கள், இவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாமே என பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

அதே வேலையில் நடிகர் விக்ராந்தின் தாயார் தான் ஷீலா என்பதால், விக்ராந்த் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் விளைவாகத்தான் ஷீலாவின் கதாபாத்திரம் சீரியலில் முடித்துவைக்கப்பட்டது என்ற சில வதந்திகளும் சமூக வலைதங்களில் பரவியது. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஷீலா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார். விரைவில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் அந்த சீரியலில் நாயகியின் தாயாக தான் நடிக்க உள்ளதாகவும், நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா அந்த சீரியலின் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் ஷீலா கூறியுள்ளார்.

SHARANYA TURADI

இந்த தகவலின் மூலம் குழியாகி உள்ள ஷீலாவின் ரசிகர்கள், அருமை அம்மா மீண்டும் உங்களை விஜய் டிவி சீரியலில் காண ஆர்வமாக உள்ளோம். உங்கள் காலை பயண தொடரட்டும் என்று வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதே சமயம் சரண்யாவின் ரசிகர்களும் இந்த தகவலின் மூலம் பேரானந்தத்தில் உள்ளனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago